ராஜஸ்தான்: சுயேச்சைகள் உதவியோடு ஆட்சியை பிடிக்கும் காங்

Subscribe to Oneindia Tamil

Kiran and Vasundhara
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பாஜகவிடமிருந்து காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

பாஜக சார்பில் முதல்வர் வசுந்தரா ராஜே தான் இந்த முறையும் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து முன்னாள் முதல்வர் அசோக் கெலோட் தலைமையில் தேர்தலை சந்தித்தது காங்கிரஸ்.

குஜ்ஜார் சமூக மக்களின் போராட்டத்தை கையாண்டதில் வசுந்தரா ராஜேவின் பெயர் கெட்டது.

இந் நிலையில் அந்த மாநிலத்தில் பாஜகவை பின் தள்ளிவிட்டு காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது.

மொத்தமுள்ள 200 இடங்களில் ஆட்சியைப் பிடிக்க 100 இடங்கள் வேண்டும் என்ற நிலையில் 96 இடங்களில் காங்கிரஸ் வென்றுள்ளது.

பாஜக77 இடங்களில் வென்றுள்ளது. மற்ற கட்சிகள் 26 இடங்களில் வென்றுள்ளன. இதனால் சில சுயேச்சைகள் ஆதரவுடன் தான் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்ற நிலை உள்ளது.

கல்வியறிவில் மிகவும் பின்தங்கிய இந்த மாநிலத்தில் முதல்வராக இருந்த வசுந்தரா ராஜே ரேம்ப் வாக்கில் நடப்பது, ஹெலிகாப்டரில் பறப்பதுமாக தன்னை மிகவும் ஹை டெக் முதல்வராகக் காட்டிக் கொண்டார். அதுவே அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

பயோ கான் நிறுவன அதிபர் கிரன் மஜூம்தாருக்கு வாயோடு வாய் முத்தம் தந்து அதிர்ச்சியையும் ஏற்படுத்தினார் ராஜே. இதையெல்லாம் அந்த மாநில மக்கள் ரசிக்கவில்லை.

சுயேச்சைகள் ஆதரவோடு ஆட்சி!-ராஜே:

ஆனால், சுயேச்சைகள் ஆதரவோடு ஆட்சியைப் பிடிப்போம் என்று முதல்வர் வசுந்தரா ராஜே கூறினார். பின்னர், தோல்வியை ஒப்புக் கொள்வதாகவும், தான் சொன்னதை திரும்பப் பெற்றுக் கொள்ளவதாவும் பல்டி அடித்துவிட்டார்.

ராஜஸ்தானில் ஏற்பட்ட தோல்விக்கு பாஜக அதிருப்தியாளர்களே காரணம் என அக் கட்சியின் மூத்த தலைவர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+