போர் திணிக்கப்பட்டால் சந்திக்க தயாராம் பாகிஸ்தான்

இதுகுறித்து இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நாங்கள் போர் திணிக்கப்படுவதை
விரும்பவில்லை. ஆனால் போர் எங்கள் மீது திணிக்கப்பட்டால் அதை சந்திக்க முழு அளவில் தயாராக இருக்கிறோம்.
எங்களது தாயகத்தைக் காக்கும் கடமையும், பொறுப்பும் எங்களுக்கு உள்ளது. இதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். நாங்கள் அன்பையும், நட்பையும் விரும்புகிறோம். இந்தப் பிராந்தியத்தில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் நிலவுவதை விரும்புகிறோம். ஆனால் அமைதியாகப் போக வேண்டும் என்ற எங்களது நோக்கத்தை பாகிஸ்தானின் பலவீனமாக யாரும் நினைத்து விடக் கூடாது.
யாரையும் ஒப்படைக்க மாட்டோம்:
மும்பைத் தாக்குதலில் தொடர்புடைய, எங்களது நாட்டைச் சேர்ந்த யாரையும், இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது. பாகிஸ்தானியர்கள் யாரேனும் மும்பை சம்பவத்தில் தொடர்பு கொண்டிரு்நதால், பாகிஸ்தான் நாட்டுச் சட்டப்படிதான் நடவடிக்கை எடுக்க முடியும்.
எங்களது சுதந்திரமான விசாரணையின் அடிப்படையில்தான் தற்போதைய கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டாலும் கூட அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது.
கைது செய்யப்பட்ட எந்த பாகிஸ்தானியும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படமாட்டார்.
பாகிஸ்தான் மண்ணை யாரும் தீவிராத செயலுக்கு பயன்படுத்தக் கூடாது என்பதில் பாகிஸ்தான் அரசு உறுதியாக உள்ளது. இதை நிரூபிக்கும் வகையில்தான், எங்களது உளவு அமைப்பின் தகவல்களின் அடிப்படையில் சமீபத்திய கைதுகள் மேற்கொள்ளப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்கள் மீது பாகிஸ்தானிய சட்டப்படி விசாரணை நடைபெறும்.
மும்பை சம்பவத்தில் பாகிஸ்தான் அரசுக்கு எந்த வகையிலும் தொடர்பு கிடையாது. இந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவுடன் இணைந்து விசாரணை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளதை ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளோம். ஆனால் இந்தியா இதுவரை பதில் எதையும் தெரிவிக்காமல் உள்ளது என்றார் குரேஷி.
முதலில் இந்தியா கோரிய தீவிரவாதிகள் யாரும் பாகிஸ்தானில் இல்லை என்றது அந்நாட்டு அரசு. அடுத்து, பாகிஸ்தானியர்கள் யாருக்கும் மும்பை சம்பவத்தில் தொடர்பு இல்லை என்றது. பிறகு ஐ.எஸ்.ஐக்கு தொடர்பு இல்லை என்றது.
ஆனால் அமெரிக்காவின் கடும் மிரட்டல் மற்றும் ஆதாரங்களை அடுக்கியதைத் தொடர்ந்து அதை ஒத்துக் கொண்டது.
இதையடுத்து மசூத் அஸார், லக்வி ஆகியோரைக் கைது செய்தது. ஆனால் அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க மாட்டோம் என்று இப்போது கூறுகிறது.
இந்தியாவின் வலியை உணர்வதாக அதிபர் சர்தாரி உருக்கமாக கூறுகிறார். ஆனால் அடுத்த நாளே, கைது செய்த தீவிரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க மாட்டோம் என்கிறார் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர்.
பாகிஸ்தானுக்கு இன்னும் எத்தனை முகங்கள் இருக்கிறதோ தெரியவில்லை.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications