விஎச்பியுடன் எந்த தொடர்பும் இல்லை-சோனால்

சோனால் ஷாவுக்கு வி.எச்.பியுடன் தொடர்பு இருப்பதால் அவரைக் குழுவிலிருந்து நீக்க வேண்டும் என அமெரிக்காவில் உள்ள பல்வேறு இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன.
இந்த நிலையில் இந்த புகாரை திட்டவட்டமாக மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் சோனால் ஷா.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் முன்பு விஸ்வ இந்து பரிஷத் அமைப்பில் இருந்தேன். அதை மறுக்கவில்லை. ஆனால் 2002ம் ஆண்டுக்கு முன்புதான் நான் அந்த அமைப்பில் இருந்தேன்.
குஜராத்தில் வி.எச்.பி. அமைப்பு பெரும் வன்முறையிலும், கலவரத்திலும் ஈடுபடும் என எனக்கு ஊகிக்க முடிந்திருந்தால் நிச்சயம் நான் அந்த அமைப்பில் இணைந்திருக்க மாட்டேன்.
இந்தியாவில் வி.எச்.பி. அமைப்பு நடத்திய கொடூரத் தாக்குதலைக் கண்டிக்காமல் அமெரிக்க பிரிவு வி.எச்.பி. இருக்கும் என எனக்குத் தெரிந்திருந்தால் நிச்சயம் நான் அந்த அமைபப்பில் சேர்ந்திருக்க மாட்டேன்.
ஆனால் தற்போது நான் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பில் இல்லை. அந்த அமைப்புடன் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை.
2002ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் மிகவும் மோசமான துயரமான சம்பவம் என்று கூறியுள்ளார் சோனால் ஷா.
இதேபோல தனது நண்பர்களுக்கும் அவர் இ மெயில் மூலம் தனக்கு ஆதரவு கோரியுள்ளார். அதில், எனக்கு உங்களது உதவி தேவை.
எனக்கு எதிராக நடந்து வரும் தவறான, அவதூறான பிரசாரத்தை எதிர்த்துப் போராட எனக்கு உங்களது ஆதரவு தேவை.
இந்த விஷமனத்தனமான பிரசாரத்தால், அதிகார மாற்றக் குழுவிலிருந்து என்னை விலகுமாறு கேட்டுக் கொள்ளக் கூடிய வாய்ப்புகள் உள்ளன என்று கூறியுள்ளார் சோனால் ஷா.












Click it and Unblock the Notifications