For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருமங்கலம் தொகுதி திமுக வேட்பாளர் லதா அதியமான்

By Staff
Google Oneindia Tamil News

Latha Adiyaman
சென்னை: மதுரை திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் திமுக சார்பில் லதா அதியமான் போட்டியிடுவார் என அக் கட்சியின் தலைவரும் முதல்வருமான கருணாநிதி இன்று அறிவித்தார்.

தற்போது லதா திருமங்கலம் நகரசபை கவுன்சிலராக உள்ளார்.

லதாவின் கணவரான அதியமான் கடந்த 89ம் ஆண்டு சேடப்பட்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். திருமங்கலம் நகரசபை தலைவராக 2 முறை பணியாற்றியவர்.

கடந்த 1 வருடத்திற்கு முன்பு அதியமான் உடல் நலக்குறைவு காரணமாக இறந்து விட்டார். அதன் பிறகு அவரது மனைவி லதா திமுகவில் தீவிரமாக செயல்பட்டு வந்தார்.

கடந்த உள்ளாட்சித் தேர்தலில் திருமங்கலம் நகரசபை கவுன்சிலர் தேர்தலில் லதா வென்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X