திருமங்கலத்தில் பாஜக போட்டியில்லை, நாடாளுமன்ற தேர்தலில் தனியே...இல.கணேசன்
சென்னை: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக தனித்து போட்டியிடும் என்றும் திருமங்கலம் இடைத் தேர்தலில் போட்டியிடவே போவதில்லை என்று பாஜக அறிவித்துள்ளது.
தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:
தேர்தல் சீர்திருத்தக் குழு புதிய தொகுதி வரைவு பட்டியலை தயாரித்து ஜனாதிபதிக்கு அனுப்பி ஒப்புதல் பெற்றுள்ளது. அதன்படி இந்த பட்டியலில் இல்லாத தொகுதிகள் அனைத்தும் காலாவதியாகி விட்டன. அதில் திருமங்கலம் தொகுதியும் ஒன்று.
இவ்வாறு காலாவதியான திருமங்கலம் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவது விந்தையாக இருக்கிறது. இதை கண்டிக்கும் வகையில் திருமங்கலம் தொகுதியில் பாஜக போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்து இருக்கிறோம். (அடடா, என்ன ஒரு காரணம்?)
இதற்கு முன்பு காலியான மங்களூர் தொகுதிக்கு தேர்தல் நடத்தப்படவில்லை. இதற்கு அந்த தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்தவர் முறையான ராஜினாமா கடிதம் கொடுக்கவில்லை என்று இப்போது கூறுகிறார்கள். ஏன் கடிதம் கொடுத்த அன்றைக்கே அதிகாரிகள் தெரிவித்து இருக்க வேண்டியதுதானே?. இதில் இருந்து திமுக தேர்தலை கண்டு அஞ்சுகிறது என்பது புலனாகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று எல்லோரும் விரும்பினார்கள். அதற்கான வாய்ப்பு இருந்ததும் உண்மை. ஆனால் சில காரணங்களுக்காக அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து கொண்டனர். இதுபற்றி நாங்கள் கருத்து சொல்ல விரும்பவில்லை.
பாஜக தனது தனித்தன்மையை இழக்காத வகையில் தமிழகத்தில் 39 தொகுதியில் போட்டியிட முடிவு செய்து களப்பணி ஆற்றி வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் தனித்தே போட்டியிடுவோம். பாஜகவுக்கு என தனித்தன்மை உண்டு. அதை வைத்து வெல்வோம்.
அத்வானியை பிரதமராக ஏற்றுக்கொள்ளும் வகையில் எந்த கட்சியாவது எங்களுடன் கூட்டணி சேர வந்தால் அவர்களை வரவேற்போம்.
வரும் 28ம் தேதி பாஜக மாநில செயற்குழு கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் கூட்டணி குறித்தும், தேர்தலில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் விவாதிக்க இருக்கிறோம்.
ஆண்டவனுக்குத் தான் தெரியும்:
நடிகர் ரஜினி, அத்வானியை சந்தித்தது வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அதை வைத்து அவர் பாஜகவுக்கு குரல் கொடுப்பாரா என்றால், அது அவர் சொன்ன மாதிரி ஆண்டவனுக்குத்தான் தெரியும் என்றார் கணேசன்.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications