கஸாப்பிடம் எப்.பி.ஐ. குழு 9 மணி நேரம் விசாரணை

லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த கஸாப், மும்பை தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக சிக்கிய ஒரே தீவிரவாதி ஆவான். மும்பை போலீஸ் வசம் உள்ள இவனிடம் தற்போது அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐயின் அதிகாரிகள் குழு கிட்டத்தட்ட 9 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தியுள்ளது.
கஸாப்பின் பாகிஸ்தான் தொடர்புகள், அவன் உள்ளிட்ட பத்து தீவிரவாதிகளையும் ஆட்டுவித்தது யார் என்ற விவரங்களை அறிய இந்த விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
மும்பைத் தாக்குதல் நடந்த பின்னர் எப்.பி.ஐ குழு மும்பை வந்தது. கடந்த 3 வாரங்களாக அவர்கள் மும்பையிலேயே முகாமிட்டு விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் விசாரணையின்போது கஸாப்பிடம் சாதாரண கேள்விகளே கேட்கப்பட்டதாக தெரிகறது. அவனது சொந்த ஊர், குடும்பத்தினர் விவரம், சொந்த ஊரில் உள்ள தெருக்களின் பெயர் (குறுக்குத் தெருக்களின் பெயர்கள் உள்பட) உள்ளிட்டவை குறித்து கேட்டு பதில் பெற்றனராம் எப்.பி.ஐ குழுவினர்.
மேலும், எங்கு தீவிரவாத பயிற்சியைப் பெற்றான், அவனுக்கு யார் பயிற்சி தந்தது, எந்த மாதிரியான ஆயுதங்களில் பயிற்சி பெற்றான், யார் மூளைச் சலவை செய்து தீவிரவாத அமைப்பில் சேர்த்தது உள்ளிட்ட விவரங்களையும் கேட்டுப் பெற்றுள்ளனர் என்று மும்பை போலீஸ் வட்டாரத் தகவல் கூறுகிறது.


Click it and Unblock the Notifications
