நெல்லை மாநகராட்சி வளாகத்தில் 47 பாம்புகள் பிடிபட்டன
நெல்லை: நெல்லை மாநகராட்சி வாளகத்தில் நேற்று மூன்று மணி நேரம் போராடி 47 பாம்புகளை பாம்பாட்டிகள் பிடித்தனர்.
நெல்லை மாநகராட்சி அலுவலகம் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த இடத்தை சுற்றிலும் வயல் வெளிகளாகும். இதனால் அந்த பகுதியிலிருந்து பாம்புகள் மாநகராட்சி அலுவலகத்திற்கு அடிக்கடி வந்தன.
பாம்பை கண்டால் படையும் நடங்கும் என்பதற்கு ஏற்ப பாம்புகளை கண்ட மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் மக்கள் என அனைத்து தரப்பினரும் பீதியுடன் பணியாற்றி வந்தனர்.
இதையடுத்து பாம்புகளை பிடிக்க மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டது.
இதற்காக பேட்டை பகுதியை சேர்ந்த பாம்பாட்டி மாரியப்பன் தலைமையில் 5 பேர் மாநகராட்சி வாளகத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் 5 பேரும் மகுடியை வாசிக்க பாம்புகள் படையெடுத்து வரத் தொடங்கின. இதில் சில பாம்புகள் படமெடுத்து ஆடின.
தகவல் பரவியதும் அங்கு ஏராளமானோர் கூடினர். மகுடியின் இசையில் மயங்கிய பாம்புகளை மிக சர்வசாதாரணமாக பாம்பாட்டிகள் பிடித்தனர். இதனை மக்கள் அதிர்ச்சியுடனும், ஆச்சர்யத்துடனும் பார்த்தனர்.
பூங்கா, வாகன நிறுத்துமிடம், குடோன், கழிப்பறைகள் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நல்லபாம்பு, சாரைபாம்பு, மஞ்சள்சாரை, கட்டுவிரியன் என 47 பாம்புகளை பிடித்தனர். இந்த பாம்புகள் 10 அடி வரை நீளம் இருந்தன.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications