ஜனவரி முதல் ரயில்வேக்கு தனி வெடிகுண்டு கண்டுபிடிக்கும் படை
நெல்லை: ஜனவரி மாதம் முதல் ரயில்வேக்கு என தனி வெடிகுண்டுகளை கண்டுபிடித்து அழிக்கும் சிறப்புப் படைப் பிரிவு உருவாக்கப்படவுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 26ம் தேதி மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் மும்பையில் பயணிகள் நெருக்கடி மிகுந்த சத்ரபதி சிவாஜி ரயில்வே ஸ்டேஷனுக்குள் புகுந்த தீவிரவாதிகள் கண்மூடிதனமாக சுட்டனர். வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். மும்பையில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.
தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு வீச்சு, துப்பாக்கிசூடு சம்பவங்களில் 200 பேர் கொல்லப்பட்டிருந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து முக்கிய ரயில்வே ஸ்டேஷன்களில் தனியாக வெடிகுண்டு நிபுணர் குழுவை ஏற்படுத்த ரயில்வே பாதுகாப்பு படை முடிவு செய்துள்ளது.
மேலும் கமண்டோ பாதுகாப்பு உள்பட பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய ரயில்வே முடிவு செய்துள்ளது.
வருகிற ஜனவரி மாதம் முதல் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வருகை தர உள்ளது என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications