நள்ளிரவு பிரார்த்தனைக்கு போனவர் வீட்டில் கொள்ளை
நெல்லை: பாளையங்கோட்டையில், நள்ளிரவு கிறிஸ்துமஸ் பிரர்த்தனைக்கு சென்றவரின் வீட்டை உடைத்து ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
நெல்லை மாநகரில் கடைகள் மற்றும், வீடுகளின் பூட்டை உடைத்து ஒரு கும்பல் கொள்ளையடித்து வருகிறது. நேற்று முன்தினம் பாளை அருகே டாக்கரம்மாள்புரம் ஆசிரியர் காலனியை சேர்ந்த மதபோதகர் விக்டர் இம்மானுவேல் ராஜின் வீட்டு கதவை உடைத்து 20 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது.
இதுபோல் பக்கத்து வீட்டை சேர்ந்த கல்லூரி ஊழியர் டேனியல் வீட்டிலும் கதவை உடைத்து 3 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது. ஓரே நாள் இரவில் இச்சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவு இன்னொரு கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
பாளை ரகுமத் நகரை சேர்ந்த எட்வர்ட் மகன் பவுல். இவர் பாளையில் எலக்ட்ரானிக் கடை நடத்தி வருகிறார்.. நேற்றிரவு 11 மணி அளவில் தனது குடும்பத்தினருடன் அங்குள்ள சர்சில் கிறிஸ்துமஸ் பிரர்த்தனைக்கு சென்றார். நள்ளிரவு 1 மணி அளவில் வீடு திரும்பினார்.
அப்போது வீட்டில் பின்புறம் இருந்த கிரில் கேட்டும், அங்கிருந்த மற்றொரு கதவும் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு அங்கிருந்த 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள 38 பவுன் நகைகள், 40 ஆயிரம் ரூபாய் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. வீட்டுக்கருகே இருந்த அவரது கடையும் உடைக்கப்பட்டு அங்கிருந்த ஆயிரம் ரூபாயும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாநகரில் மீண்டும் தலைதூக்கியுள்ள தொடர் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் பீதியடைந்து வருகின்றனர். கொள்ளையர்கள் பற்றி துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications