'புலி ஆதரவு'-நடவடிக்கை கோரும் எஸ்ஆர்பி
சென்னை: விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் வைகோ, திருமாவளவன், பழ.நெடுமாறன் ஆகியோர் மீது தமிழக அரசு தயக்கமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தியாவில் இருப்பதுபோல் இலங்கையிலும் தமிழர்களுக்கு தனி மாநிலம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதுதான் 1987ம் ஆண்டு எட்டப்பட்ட இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் நோக்கமாக இருந்தது.
ஆனால் விடுதலைப் புலிகளால் அந்த நோக்கம் சிதைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்த உடன்பாட்டின் சிற்பியான தலைவர் ராஜீவ் காந்தியின் உயிர் விடுதலைப் புலிகளால் தமிழக மண்ணிலேயே பறிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கம் என்று அறிவிக்கப்பட்டு அவர்கள் மீது இந்திய அரசு தடை விதித்தது.
அதன் பிறகும் புலிகளுக்கு பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் தமிழகத்தில் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இவர்கள் முன்வைக்கும் தமிழீழ ஆதரவு கோரிக்கை பிரிவினைவாதத்தை நோக்கமாக கொண்டு அமைந்திருக்கிறது.
இந்தியாவின் ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் சீர்குலைக்கும் வழியில் சென்று கொண்டிருக்கிறது. இதை எதிர்த்து குரல் கொடுப்பதால் காங்கிரஸ் கட்சியின் மீது ஆத்திரமும், கோபமும் கொப்பளிக்கின்றன. அதன் விளைவாகவே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் ஊழியர்கள் தாக்கப்படும் நிலை உருவானது.
தமிழீழத்துக்கு ஆதரவு தெரிவித்து கூட்டம் நடத்துவதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிடிவாதமாக உள்ளது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, புலிகளை என்றும் ஆதரிப்போம் என்று முழக்கமிடுகிறார். தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறன் போன்றவர்களும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து பேசி வருகின்றனர்.
சட்டப்படி குற்றம் என்று தெரிந்தும் இவர்கள் தொடர்ந்து இதுபோன்று செயல்பட்டு வருகிறார்கள். எனவே இவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்பது தமிழக அரசுக்கு தவிர்க்க முடியாத கடமையாகும்.
எனவேதான், இவர்கள் மீது தமிழக அரசு தயக்கமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வியும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
தமிழ்நாட்டில் பிரிவினைவாதத்துக்கு எதிராக இருப்பவர்களுக்கு பல அச்சுறுத்தல்களும் மிரட்டல்களும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும் வகையில் விரைந்து நடவடிக்கைகளில் இறங்குமாறு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications