பெங்களூர்: ராணுவ வளாகத்திற்குள் நுழைந்த மாணவர் சுட்டுக் கொலை
பெங்களூர்: பெங்களூரில் உள்ள ராணுவக் முகாமுக்குள் நுழைந்த கல்லூரி மாணவரை, பாதுகாவலர்கள் சுட்டுக் கொன்றதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
பெங்களூர் பால்ட்வின் கல்லூரியில் பி.காம். முதலாமாண்டு படித்து வந்தவர் முனிராம் (20). இவர் இன்று அதிகாலை 1 மணியளவில் தனது நண்பர்கள் சிலரோடு, எம்.ஜி. சாலையில் சுற்றிக் கொண்டிருந்தார்.
இதைப் பார்த்த போலீஸார் அவர்களை நிற்குமாறு கூறியுள்ளனர். போலீஸாரைப் பார்த்த முனிராமும் அவரது நண்பர்களும், அங்கிருந்து ஓடினர்.
விமான நிலைய சாலையில் உள்ள ராணுவ தலைமையக அலுவலக வளாகத்திற்குள் முனிராம் புகுந்து ஓடியுள்ளார். அங்குள்ள ஒரு கட்டடத்தின் மீது ஏறி ஒளிய முயன்றார்.
முனிராம் மாடி மீதி ஏறுவதை துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் பார்த்து விட்டனர்.
இதையடுத்து அவர்கள் முனிராமை கீழே இறங்கி வருமாறும், சரணடையுமாறும் உத்தரவிட்டனர். அவர் தீவிரவாதியாக இருக்கலாம் என்றும் அவர்களுக்கு சந்தேகம் பிறந்தது.
ஆனால் முனிராம், பாதுகாவலர்களிடம் சிக்காமல் தப்புவதற்காக வேறு பக்கத்தில் குதித்து சுற்றுச்சுவரை நோக்கி ஓடியுள்ளார்.
இதையடுத்து அவரை நோக்கி பாதுகாவலர்கள் சுட்டனர். இதில் சுருண்டு விழுந்து பிணமானார் முனிராம்.
இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications