ஜிஎஸ்எம் சேவையை விரிவாக்கும் ரிலையன்ஸ்
மும்பை: சிடிஎம்ஏ செல்போன்களுக்கு புகழ்பெற்ற ரிலையன்ஸ் இப்போது ஜிஸ்எம் சேவையையும் அளிக்கிறது.
தற்போது எட்டு வட்டங்களில் மட்டும் ஜிஎஸ்எம் சேவை வழங்கி வரும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் இப்போது மேலும் 14 வட்டங்களுக்கு அந்த சேவையை விரிவுபடுத்தப் போகிறது.
இதற்கென ரூ.10,000 கோடி முதலீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளது.
அனைத்து தொலைத் தொடர்பு வட்டங்களிலும் சி.டீ.எம்.ஏ. மற்றும் ஜி.எஸ்.எம். செல்போன் சேவை அளிக்க தொடங்கிய பின்னர், தேசிய அளவில் இந்த இரண்டு வகை தொழில் நுட்பத்திலும் சேவையளிக்கும் ஒரே நிறுவனமாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உருவெடுக்கும். பொதுத் துறையைச் சேர்ந்த பீ.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்கள், சில குறிப்பிட்ட வட்டங்களில்தான் இவ்விரண்டு சேவைகளையும் வழங்கி வருகின்றன.
இது குறித்து ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி செவ்வாய்க்கிழமை கூறுகையில், தற்போது நிறுவனம் 11,000 நகரங்களிலும், 3 லட்சம் கிராமங்களிலும் ஜி.எஸ்.எம். செல்போன் சேவையளித்து வருகிறது. அடுத்த சில மாதங்களில் இச்சேவையை பெறும் நகரங்களின் எண்ணிக்கை 24,000 ஆகவும், கிராமங்களின் எண்ணிக்கை 6 லட்சமாகவும் உயரும்.
இந்த திட்டங்களுக்கு தேவைப்படும் நிதியை திரட்ட, நிதி ஆதாரம் வலுவாக உள்ளது, என்று தெரிவித்துள்ளார்.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications