கூட்டணி குறித்து ஜனவரி 2ல் முடிவு-ராமதாஸ்

நிருபர்களிடம் பேசிய அவர்,
1967ம் ஆண்டுக்குப் பிறகு இதுவரை நடந்துள்ள இடைத் தேர்தல்களில் இருமுறை மட்டுமே எதிர்க் கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. எந்தக் கட்சியின் உறுப்பினரை இழந்ததற்காக இடைத் தேர்தல் நடக்கிறதோ அதே கட்சியைச் சேர்ந்தவரையே மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் பிற கட்சிகளும் விட்டுக் கொடுக்க வேண்டும்.
ஓரிடத்தில் கிடைக்கும் வெற்றி, தோல்வி ஆட்சியை நிர்ணயிப்பதில்லை என்பதை நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
திருமங்கலத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக திமுக, அதிமுக இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காத நிலையை அனைத்துக் கட்சியினரும் இணைந்து உருவாக்க வேண்டும். அது தான் ஜனநாயகத்துக்கு நல்லது.
காங்கிரஸ்-திருமாவளவன் இடையிலான மோதல் துரதிஷ்டவசமானது. இரு கட்சிகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். இலங்கையில் தினம் செத்து மடியும் நம் மக்களுக்காக நாம் ஒற்றுமையாக இருந்து போராட வேண்டும்.
திருமாவளவனிடம் நான் இது குறித்துப் பேசினேன். அவரும் கூட காங்கிரஸ் கட்சியினருடன் நேரடியாகப் பேசத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களையும் தொடர்பு கொண்டு வருகிறேன். சுமூக நிலையை உருவாக்க முயல்வேன் என்றார் ராமதாஸ்.
கட்சியின் நிறை குறைகள் ஆய்வு:
இதற்கிடையே பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பாமகவின் 2009ம் ஆண்டிற்கான சிறப்பு பொதுக்குழு கூட்டம் வரும்ற 2ம் தேதி திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் தோட்டம், பா.ம.க அரசியல் பயிலரங்கத்தில் நடைபெறும்.
சமூக நீதிக்கான இட ஒதுக்கீட்டுப் பிரச்சினைகள், சமச்சீர் கல்வி முறை, மது ஒழிப்பு, உழவர் பிரச்சினைகள், நெசவாளர்கள், மீனவர் பிரச்சினைகள், அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகள், விலைவாசி உயர்வு, சிறப்பு பொருளாதார மண்டலம் உள்ளிட்ட பிரச்சினைகளை பாமக கையில் எடுத்து கொண்டு குரல் கொடுத்து வந்தது. 2008ம் ஆண்டில் இந்த பிரச்சனைகளில் கட்சி எவ்வாறு செயல்பட்டது, நிறை குறைகள் என்ன என்பது குறித்து ஆராயப்படும்.
அதே போல 2009ம் ஆண்டிற்கான செயல் திட்டங்கள் குறித்தும், கட்சியின் வளர்ச்சி பற்றியும் கலந்து ஆலோசிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இந்த கூட்டத்தில் சிறப்பு தீர்மானமாக திருமங்கலம் தொகுதியில் யாரை ஆதரிப்பது என்பது பற்றி தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.
-
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
தவெகவில் இணைந்த 5 மாஜி அமைச்சர்கள், 7 Ex MLAs! இதுவரை அதிமுகவில் இருந்து விலகியவர்கள் யார் யார்? -
Sengottaiyan: அதிமுக அவ்வளவு தான் முடிஞ்சுது.. செங்கோட்டையன் டைமிங் பன்ச் -
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்











Click it and Unblock the Notifications