சாலை விபத்தில் கலெக்டரின் உறவினர்கள் இருவர் பலி
கரூர்: கரூரில் நடந்த சாலை விபத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் பழனியாண்டியின் உறவினர்கள் இருவர் பலியாயினர்.
கர்நாடக மாநிலம் பெங்களூர் அரிகரேயை அடுத்த மைக்கோ லே-அவுட்டை சேர்ந்தவர் சுப்பிரமணி (62). இவரது மனைவி சகுந்தலா (59). இவர்களது மகன் சுரேஷ்குமார் (40), மருமகள் லாவண்யா (35), பேத்திகள் சுரேகா (8), சினேகா (6).
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் பழனியாண்டியின் மனைவி மலர்விழியின் சகோதரிதான் சகுந்தலா. சுரேஷ்குமார் கம்யூட்டர் என்ஜினீயர். பெங்களூரில் ஒரு வேலை பார்த்து வந்தார்.
சுப்பிரமணி தனது மனைவி, மகன், மருமகள் மற்றும் பேத்திகளுடன் ஒரு காரில் பெங்களூரில் இருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்டார். காரை சுப்பிரமணி ஓட்டினார். கார் கரூரை அடுத்த மண்மங்கலம் தூளிப்பட்டி அருகே வந்தபோது எதிரே வந்த லாரியும், காரும் கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.
இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. லாரி ரோட்டில் கவிழ்ந்தது. காரில் இருந்த சுரேஷ்குமார் சம்பவ இடத்திலேயே பலி ஆனார். அவரது தாய் சகுந்தலா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பலி ஆனார்.
சுப்பிரமணி, லாவண்யா, சுரேகா, சினேகா ஆகிய 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications