ஆணையிறவையும் பிடித்து விட்டதாக கூறுகிறது ராணுவம்

விடுதலைப் புலிகளின் தலைநகரம் என கூறப்படும் கிளிநொச்சியை நேற்று முன்தினம் இலங்கை ராணுவம் பிடித்தது. இதையடுத்து ஆணையிறவு மற்றும் முல்லைத்தீவை குறி வைத்து ராணுவம் முன்னேறத் தொடங்கியது.
கிளிநொச்சியிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆணையிறவையும் தற்போது பிடித்து விட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்திற்கான நுழைவாயில் என அழைக்கப்படுவது ஆணையிறவாகும்.
கடந்த 2000மாவது ஆண்டு இந்தப் பகுதியை விடுதலைப் புலிகள் கைப்பற்றினர்.
இந்த நிலையில் எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ராணுவம் மீண்டும் ஆணையிறவை கைப்பற்றியுள்ளது.
ஆணையிறவு பிடிபட்டுள்ளதன் மூலம் தலைநகர் கொழும்பை, யாழ்ப்பாண தீபகற்பத்துடன் இணைக்கும் ஏ-9 நெடுஞ்சாலை முழுமையாக ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது.
தற்போது முல்லைத்தீவு மற்றும் அதை ஒட்டியுள்ள அடர்ந்த வனப் பகுதிகளில் விடுதலைப் புலிகள் இடம் பெயர்ந்துள்ளனர்.
முல்லைத்தீவையும் பிடிக்க ராணுவம் தீவிரமாக முயன்று வருகிறது. அங்கு ஹெலிகாப்டர்கள் மூலம் சரமாரியாக குண்டுகளை வீசி ராணுவம் தாக்கி வருவது குறிப்பிடத்தக்கது. இதில் பல அப்பாவிகள் உயிரிழந்திருப்பதாக விடுதலைப் புலிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications