இந்தோனேசியாவில் பயங்கர பூகம்பம் - சுனாமி எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
ஜகார்தா: இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் கடலுக்கடியில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் அந்த எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.
பூகம்பம் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது, பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு ஓட்டம் பிடித்தனர்.
ரிக்டர் அளவுகோலில் பூகம்பத்தின் அளவு 7.2 ரிக்டராக பதிவாகியிருந்தது.
இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2.43 மணிக்கு மனகோவரி என்ற தீவுப்பகுதியில் கடலுக்கடியில் இந்த பூகம்பம் ஏற்பட்டது
இதன் அளவு 7.6 ரிக்டராக இருந்ததாக அமெரிக்க பூகம்பவியல் துறை தகவல் தெரிவித்துள்ளது.
பூகம்பம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இதையடுத்து மக்கள் வீடுகளை விட்டு அலறி அடித்துக் கொண்டு ஓடினர். இருப்பினும் சுனாமி எச்சரிக்கை பின்னர் திரும்பப் பெறப்பட்டது.












Click it and Unblock the Notifications