ஆனையிறவு முற்றுகை-புலிகள் முறியடிப்பு

இது குறித்து விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:
பரந்தனில் இருந்து இரண்டாம் கட்டை நோக்கி இலங்கை பாதுகாப்புப் படையினர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி முதல் மும்முனைகளில் முன்னேறத் தொடங்கினர்.
இதற்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிரத் தாக்குதல் நடத்தினர். பிற்பகல் வாக்கில் படையினரின் முன்னேற்றத்தை புலிகள் தடுத்து நிறுத்தினர்.
இந்த மோதலில் ராணுவத்தினர் 60 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ராணுவத்தினரிடமிருந்து ஏராளமான துப்பாக்கிகளையும் புலிகள் கைப்பற்றினர்.
முல்லைத்தீவு புலிகளின் ராணுவத் தலைமையகமாக விளங்குகிறது. வனப் பகுதி நிரம்பிய இந்த மாவட்டம் முழுமையாக தற்போது புலிகள் வசம் உள்ளது.
முல்லைத்தீவிலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் தற்போது ராணுவம் நிலை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
முல்லைத்தீவைப் பிடிக்கும் பொறுப்பு பிரிகேடியர் நந்தனா உதவத்தா தலைமையிலான 59வது படைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவின் மேற்கிலிருந்தும், கடற்கரை கழிமுகப் பகுதியிலிருந்தும் இந்தப் படைப் பிரிவினர் முல்லைத்தீவு நோக்கி முன்னேறி வருகின்றனர்.
ஒட்டு சுட்டானுக்குள் நுழைந்தது ராணுவம்
இதற்கிடையே, முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டானுக்குள் நுழைந்து விட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.
14வது சிங்கள ரெஜிமென்ட்டின் தளபதியான மேஜர் பெரேரா தலைமையில், லெப்டினென்ட் கர்னல் ஹதங்கொடா தலைமையிலான 642வது படைப்பிரிவு ஒட்டுசுட்டானுக்குள் நுழைந்திருப்பதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
மாங்குளம்-முல்லைத்தீவு இடையேயான ஏ-34 சாலையில், ஒட்டுசுட்டான் சந்தி பிரதான சந்திப்பாகும்.
விடுதலைப் புலிகள் இந்த சாலையை தங்களது போக்குவரத்துக்கு முக்கியமாக பயன்படுத்தி வந்ததாக ராணுவம் கூறுகிறது.
ஆனையிறவு: 'ரா' பரப்பிய செய்தி?
ஆனையிறவு இன்னும் வீழாத நிலையில் அது வீழ்ந்து விட்டதாக இந்திய உளவு அமைப்பான ரா முன்கூட்டியே இந்திய ஊடகங்களுக்கு செய்தி பரப்பி விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
கிளிநொச்சியைப் பிடித்து விட்ட ராணுவம், அடுத்து ஆனையிறவையும் பிடித்து விட்டதாக நேற்று செய்திகள் கூறின. இதையடுத்து அனைத்து இந்திய ஊடகங்களும் அந்த செய்தியை ஒளிபரப்பின, பிரசுரித்தன, ஒலிபரப்பின.
ஆனால் இந்தியாவின் ரா அமைப்புதான் இந்த செய்தியை பரப்பியதாகவும், உண்மையில் ஆனையிறவு நோக்கி ராணுவம் முன்னேறியபடிதான் உள்ளதாகவும், இன்னும் அது ஆனையிறவை பிடிக்கவில்லை என்றம் தகவல்கள் கூறுகின்றன.
இதை இலங்கை ராணுவமே விளக்கியுள்ளது. ஆனையிறவுக்கு இரண்டரை கிலோமீட்டர் தொலைவில் ராணுவம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராணுவத் தரப்பில் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், பிரிகேடியர் சாவேந்திர சில்வா தலைமையிலான 58வது படைப் பிரிவினர் தொடர்ந்து முன்னேறிக் கொண்டுள்ளனர். விரைவில் ஆனையிறவு வீழும்.
சில மணி நேரங்கள் அல்லது சில நாட்களில் ஆனையிறவைப் பிடிப்போம். ஆனையிறவை நெருங்க இன்னும் இரண்டரை கிலோமீட்டர் தொலைவுதான் உள்ளது என்றார்.
இதன் மூலம் ஆனையிறவு இன்னும் பிடிபடவில்ல என்பது தெளிவாகியுள்ளது.
இந்திய உளவு அமைப்பு பரப்பிய செய்தியால்தான் ஆனையிறவு வீழ்ந்து விட்டதாக நேற்று அனைத்து இந்திய ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications