சமூக சேவகர் 'டிராபிக்' ராமசாமி தாக்கப்பட்டார்
சென்னை: சென்னையைச் சேர்ந்த சமூக நல சேவகர் டிராபிக் ராமசாமி தாக்கப்பட்டார்.
சென்னை ரங்கராஜபுரத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று மாலை தனியாக அவர் இருந்தபோது சிலர் வீடு புகுந்து தாக்கி விட்டுத் தப்பினர்.
பொது நலன் மனுக்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து மக்கள் சேவை ஆற்றி வருபவர் டிராபிக் ராமசாமி. இதனால் அவருக்கு பல முனைகளிலிருந்தும் மிரட்டல் இருந்து வருகிறது.
இந்த நிலையில் பிராட்வே பகுதியில், போக்குவரத்து சீர்குலைவை சரி செய்ய ஜோன்ஸ் சாலையில் புதிய போக்குவரத்து மாற்றங்களை காவல்துறை அறிவித்தது. இதற்கு டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கே காரணம்.
இதனால் வெங்கட மேஸ்திரி சாலை, ஜோன்ஸ் சாலை, செம்புதாஸ் தெரு பகுதி வியாபாரிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு 7.30 மணியளவில் தனது வீட்டில் ராமசாமி இருந்தபோது சிலர் வந்து கதவைத் தட்டியுள்ளனர். ராமசாமி எழுந்து வந்து கதவைத் திறந்துள்ளார்.
அப்போது அந்தக் கும்பல் ராமசாமியை கீழே தள்ளி விட்டு சரமாரியாக அடித்துள்ளனர். பின்னர் அக்கும்பல் ஓடி விட்டது.
போக்குவரத்து மாற்றங்களை எதிர்த்து சனிக்கிழமையன்று 2500க்கும் மேற்பட்ட கடைக்காரர்கள், கடைகளை அடைத்து விட்டு போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே கடைக்காரர்கள்தான் டிராபிக் ராமசாமியைத் தாக்கியிருக்க வேண்டும் என சந்தேகிக்கப்படுகிறது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications