திருமங்கலம்-110 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை
திருமங்கலம்: திருமங்கலம் தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள், மாலை 5 மணிக்குள் வெளியேற வேண்டும் என மதுரை சரக டிஐஜி அம்ரேஷ் பூஜாரி அறிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்பு பணியில் 8 கம்பெனிகளைச் சேர்ந்த 800 துணை ராணுவ படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுடன் 1700 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தொகுதியில் மொத்தம் 15 செக் போஸ்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு மற்றும் சோதனை பணியை மேற்கொண்டுள்ளனர்.
செக் போஸ்ட்களில் போலீஸ் வீடியோகிராபர் மூலம் அங்கு நடக்கும் நிகழ்வுகள் பதிவு செய்யப்படுகிறது. பிரச்சனைகள் ஏதாவது ஏற்பட்டால் அதனை சமாளிப்பதற்காக அதிரடிப்படையினர் 25 வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று மாலை 5 மணிக்குள் திருமங்கலம் தொகுதியில் உள்ள வாக்காளர் அல்லாதவர்கள் மற்றும் திருமங்கலம் தொகுதியை சேராத வெளியூர் ஆட்கள் உடனடியாக திருமங்கலம் தொகுதியில் இருந்து வெளியேற வேண்டும்.
அவ்வாறு வெளியேற தவறும் பட்சத்தில் அவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
பிரசாரம் ஓய்கிறது:
இதற்கிடையே நாளை மறுநாள் (9ம் தேதி) தேர்தல் நடைபெறுவதையடுத்து இன்று மாலையுடன் அங்கு பிரச்சாரம் ஓய்கிறது.
110 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை:
இங்குள்ள 1,55, 647 வாக்காளர்கள் ஓட்டளிக்க 190 வாக்குச் சாவடிகள் அமைக்ககப்பட்டுள்ளன.
இங்கு மொத்தம் 380 மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. இவை நாளை அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். தொகுதி முழுவதும் 33 கிராமங்களில் 110 வாக்குச் சாவடிகள் பதட்டம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டு அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications