ஸ்ரீவைகுண்டம்: 2 கிராமங்களில் காலரா
ஸ்ரீவைகுண்டம்: நெல்லை மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே இரு கிராமங்களில் பரவியுள்ள காலராவுக்கு 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொங்கராயக்குறிச்சி கிராமத்தில் கடந்த 1ம் தேதி முதல் காலரா பரவியது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் ஸ்ரீவைகுண்டம், பாளை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று பாதிப்பு அதிகரித்தது. கொங்கராயக்குறிச்சியை சேர்ந்த லெட்சுமி, கண்ணன், சுதா, செல்லம்மாள், செல்வி, அன்புதாய், பாலசுந்தரி, கிறிஸ்துராணி உள்பட 15 பேர் ஸ்ரீவைகுண்டம் ஆஸ்பத்திரியில் சிகிக்சை பெற்று மேல்சிகிச்சைக்காக பாளை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கிறிஸ்துராணியின் 5 மாத குழந்தை ஸ்ரீவைகுண்டம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறது.
தற்போது கொங்கராயக்குறிச்சியி்ல் இருந்து வாந்தி பேதி தென்திருப்பேரைக்கு பரவியுள்ளது. தென்திருப்பேரையை சேர்ந்த கல்யாணி, சித்ரா என்ற 2 வயது குழந்தையும் பாதிக்கப்பட்டு ஸ்ரீவைகுண்டம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி காளியப்ப ராமையா, ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் புஷ்பம்மாளிடம் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கொங்கராயக்குறிச்சி வாந்தி பேதிக்கு எந்த தடுபபு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் கிராம செவிலியரும் ஊரில் இல்லை.
எனவே உடனடியாக வாந்தி-பேதியை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications