காஸாவில் தொடரும் இஸ்ரேல் தாக்குதல் - பலி 850 ஆனது
காஸா: காஸா நகரம் மீதான இஸ்ரேலின் வெறித் தாக்குதல் இன்னும் ஓயவில்லை. அங்கு இஸ்ரேலின் தாக்குலுக்குப் பலியானோரின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளது.
ஹமாஸ் அமைப்பினரின் ராக்கெட் ஏவுதளப் பகுதிகள், ஆயுத கிட்டங்கிகளை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. போர் மேலும் தீவிரமடையும் என்று எச்சரிக்கும் துண்டுப் பிரசுரங்களையும் இஸ்ரேல் விமானம் மூலம் வீசி வருகிறது.
காஸா நகர தாக்குதலில் சிக்கி உயிரிழந்தோர், காயமடைந்தோரின் உறவினர்கள், குடும்பத்தாரின் கூட்டத்தால் மருத்துவமனைகள் அழுகுரல் மையங்களாக மாறிக் காணப்படுகின்றன.
காஸா நகரம் முழுதும் எங்கு பார்த்தாலும் இடிபாடுகளும், கரும்புகை மூட்டமுமாக காணப்படுகிறது.
கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக நடந்து வரும் இந்தத் தாக்குதலில் இதுவரை 850க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.
ஹமாஸ் தாக்குதலில் இதுவரை 4 பாதுகாப்புப் படையினர் உள்பட 13 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே காஸாவை சுற்றி வளைத்துள்ள இஸ்ரேல் ராணுவம், தற்போது காஸா நகருக்குள் மெதுவாக முன்னேறிச் செல்கிறது. இதுவரை ஒன்றரை கிலோமீட்டர் வரை உள்ளே போயுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, தெற்கு இஸ்ரேல் பகுதியில் 15 ராக்கெட்களை வீசி ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பெரும் பீதி நிலவுகிறது. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 3 பேர் காயமடைந்துள்ளனர்.
அதேசமயம், ஜெபாலியா எனற இடத்தில், இஸ்ரேல் பீரங்கி்த் தாக்குதலில் ஒரு வீடு இடிந்து விழுந்தது. அந்த வீட்டுக்கு வெளியே அமர்ந்திருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர்.
ரபா என்ற நகரில், இஸ்ரேல் வான் தாக்குதலில் ஒரு பெண் உயிரிழந்தார்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications