முதல்வர் பதவியிலிருந்து விலகினார் சிபு சோரன் - மராண்டியும் விலகல்
ராஞ்சி: முதல்வர் பதவியிலிருந்து ஜார்க்கண்ட் முதல்வர் சிபு சோரன் இன்று விலகினார். துணை முதல்வர் மராண்டியும் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஜார்க்கண்ட முதல்வராக உள்ள சிபு சோரன் சமீபத்தில் தமர் தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில் படு தோல்வி அடைந்தார்.
இதையடுத்து அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. ஆனால் நான் விலக மாட்டேன். மறுபடியும் இடைத் தேர்தலில் போட்டியிடுவேன் என கூறி வந்தார் சோரன். இதனால் நெருக்கடி ஏற்பட்டது.
ஜார்க்கண்ட் மாநில அரசை டிஸ்மிஸ் செய்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்தது.
இந்த நிலையில் டெல்லி சென்ற சோரன் காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பதவியிலிருந்து விலகி விடுமாறு அவருக்கு காங்கிரஸ் தலைமை ஆலோசனை கூறியது.
லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளமும், சோரன் விலக அறிவுறுத்தியது.
இதைத் தொடர்ந்து சோரன் ராஞ்சி திரும்பி தனது கட்சி எம்.எல்.ஏக்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் நேற்று முன்தினம் விர ஆலோசனை நடத்தினார். கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் ஆலோசனை நடந்தது.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சோரன், நான் டெல்லி சென்று மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைமையிடம் கட்சி எடுத்துள்ள முடிவை தெரிவிக்கவுள்ளேன்.
எனது பதவியை ராஜினாமா செய்ய நான் ஒத்துக் கொண்டு விட்டேன்.
அதற்கு மேல் இப்போது எதுவும் சொல்ல மாட்டேன். லாலு பிரசாத் யாதவ் மற்றும் சோனியா காந்தியை சந்தித்து மற்ற விவரங்களைக் கூறுவேன்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தொடர்ந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் நீடிக்கும். எதிர் வரும் தேர்தல்களையும் நாங்கள் இணைந்தே சந்திப்போம். எனது தோல்வியை நான் ஒத்துக் கொள்கிறேன். மக்கள் தீர்ப்பை மதிக்கிறேன் என்றார்.
இந்த நிலையில், இன்று காலை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் சோரன்.
முதல்வர் பதவிக்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த சம்பை சோரனை முதல்வராக்க வேண்டும் என காங்கிரஸ் மேலிடத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார் சோரன். இதை டெல்லிக்கு சென்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளிடம் தெரிவிக்கவுள்ளேன் என்றும் அவர் கூறியுள்ளார் சோரன்.
மராண்டியும் விலகல் ..
அவர் விலகுவதற்கு முன்பு துணை முதல்வர் ஸ்டீபன் மராண்டி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
சிபு சோரனும், மராண்டியும் தங்களது ராஜினாமா கடிதங்களை ஆளுநர் சையத் சிப்தே ரஸியை தனித் தனியாக நேரில் சந்தித்து வழங்கினர்.
-
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
தங்க இறக்குமதியில்.. ஒரு கிலோவுக்கு ₹10 லட்சம் தள்ளுபடி.. வரி 15% உயர்வு.. என்னங்க நடக்குது? -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்?












Click it and Unblock the Notifications