மாரட் கலவரம்: 62 பேருக்கு ஆயுள் தண்டனை
கோழிக்கோடு: கோழிக்கோடு மாவட்டம் மாரட் என்ற இடத்தில் கடந்த 2003ம் ஆண்டு 9 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 62 பேருக்கு இன்று ஆயுள் தண்டனை விதித்து கோழிக்கோடு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கோழிக்கோடு மாவட்டம், மாரட் பகுதியில் கடந்த 2003ம் ஆண்டு மே மாதம் பெரும் கலவரம் ஏற்பட்டது. இதில் 9 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 139 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 76 பேர் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டு விட்டனர்.
இந்த நிலையில் மீதமிருந்த 63 பேர் மீது கோழிக்கோடு சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
நீதிபதி பாபு மாத்யூ ஜோசப் பிறப்பித்த தீர்ப்பில், 62 பேர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபணமாகியுள்ளன. எனவே அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது.
இவர்களில் 13 பேர் மீது, இருவரைக் கொன்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.
3 பேரைக் கொன்றதாக ஒருவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.
மற்றவர்களுக்கு கொலை மற்றும் கொலை முயற்சி புகார்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன.
63வது குற்றவாளிக்கு ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படுகிறது. அவருக்கு ரூ. 2000 அபராதமும் விதிக்கப்படுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications