சபரிமலையில் 30 இலங்கை அய்யப்ப பக்தர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
சபரிமலை: சபரிமலைக்கு வந்த இலங்கையைச் சேர்ந்த 30 அய்யப்ப பக்தர்கள், உரிய ஆவணங்களுடன் வராததால் கைது செய்யப்பட்டனர்.
இலங்கையிலிருந்து 30 அய்யப்ப பக்தர்கள் மாலை போட்டு சபரிமலைக்கு வந்திருந்தனர். அவர்கள் மீது சந்தேகமடைந்த சன்னிதானம் காவல்துறை அதிகாரி வேணுகோபால் தலைமையிலான போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்களில் 8 பேரிடம் மட்டுமே பாஸ்போர்ட் இருந்தது. ஆனால் பிற ஆவணங்கள் இல்லை. மற்ற 22 பேரிடமும் பாஸ்போர்ட் உள்ளிட்ட எதுவும் இல்லை. திருச்சியில் பாதுகாப்பாக வைத்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
இருப்பினும் கையில் எந்த ஆவணமும் இல்லாததால், அவர்கள் 30 பேரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications