குருவாயூர் எக்ஸ்பிரஸ் மீது என்ஜின் மோதல்
திருச்சி: மிகப்பெரும் விபத்தில் இருந்து தப்பியது குருவாயூர் எக்ஸ்பிரஸ். இந்த ரயில் மீது சோதனை ரயில் என்ஜின் மோதியதில் 4 பயணிகள் காயமடைந்தனர். 2 பெட்டிகள் சேதமடைந்தன.
கேரள மாநிலம் குருவாயூரில் இருந்து சென்னைக்கு செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் திருச்சி ரயில் நிலையத்துக்கு நேற்று சுமார் 30 நிமிடம் தாமதமாக 2.20 மணிக்கு வந்தது.
அப்போது ரயில் நிலையத்தில் இருந்து சோதனை ரயில் என்ஜினை டிரைவர் கலியமூர்த்தி என்பவர் ஓட்டிச் சென்றார். குருவாயூர் எக்ஸ்பிரஸ் வருவதை கவனிக்க தவறிய அவர் குருவாயூர் எக்ஸ்பிரஸ் மீது மோதினார்.
இதில் ஒரு பெட்டி முழுவதுமாகவும், இன்னொரு பெட்டியின் ஒரு பகுதியும் சேதமடைந்தன. இதையடுத்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் அந்த இடத்திலேயே நிறுத்தப்பட்டது. பிளாட்பார வசதி இல்லாததால் பயணிகள் அனைவரும் தங்களுடைய பொருட்களுடன் ரயில் பெட்டிகளில் இருந்து கீழே குதிக்க வேண்டிய பரிதாப நிலைமை ஏற்பட்டது.
விபத்தில் மதுரையைச் சேர்ந்த சிவகுமார் ( 30), அவரது 10 மாத கைக் குழந்தை ரீனா, மணப்பாறை ரயில்வே ஊழியர் தங்கராஜ் (54), மேற்கு வங்கத்தை சேர்ந்த சுதீஷ் விஸ்வாஸ் (30) ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.
சேதமடைந்த பெட்டிகளில் இருந்த பயணிகளுக்கு வேறு பெட்டிகளில் இடம் வழங்கப்பட்டது, அவசரமாக செல்லவேண்டும் என விரும்பிய பயணிகளுக்கு வேறு ரயிலில் பயணம் செய்ய அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். பின்னர் மாலை 5 மணி அளவில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் சென்னை புறப்பட்டது.
சோதனை என்ஜினை ஓட்டிச்சென்ற டிரைவரிடம் ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications