கரூர் அருகே பல கோடி மதிப்புள்ள பச்சைக்கல் புதையல் !
கரூர்: கரூர் அருகே ஒரு தோட்டத்தில் கிணறு வெட்டும் போது கோடிக்கணக்கான ரூபாய் பொறுமானமுள்ள அரிய பச்சைக் கல் கிடைத்தாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ளது மாணிக்கபுரம். இந்த பகுதியில் பூமிக்கு அடியில் அதிக அளவு பச்சைக்கல் கிடைப்பதால் கடந்த சில ஆண்டுகளாக கிணறு வெட்ட, மற்றும் குழி பறிக்க போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் தடை விதித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவர் தன்னுடைய நிலத்தில் கிணறு வெட்ட முடிவு செய்தார்
இதையடுத்து கூலி ஆட்கள் சிலர் கடந்த சில நாட்களாக கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த இடத்தில் அதிக அளவு பச்சைக்கல் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த தகவல் வெளியே தெரிய வர அந்த பகுதி மக்கள் இரவு ரேத்தில் அங்கு சென்று பச்சைக் கல்லை தோண்ட முயற்சி செய்துள்ளனர்.
இதனால் உரிமையாளர் ஜெகநாதனுக்கும், கிராமத்தைச் சேர்ந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தகவல் அறிந்த கிருஷ்ணராயபுரம் மண்டல துணை தாசில்தார், மாயனூர் இன்ஸ்பெக்டர் சின்னத்தம்பி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications