ஈழத் தமிழர்களுக்காக புதுவை மாணவர்கள் நாளை கருப்பு பேட்ஜ் போராட்டம்
புதுச்சேரி: ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து புதுச்சேரியில், அனைத்துக் கல்லூரி பள்ளி மாணவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்துகிறார்கள்.
ஈழத் தமிழர் படுகலையைக் கண்டித்தும், இந்திய அரசே இனவெறிப் போரைத் தடுத்து நிறுத்து என வலியுறுத்தியும், புதுச்சேரியில் நாளை அனைத்துக் கல்லூரி, பள்ளி மாணவர்கள் கறுப்புப் பேட்ஜ் அணிந்துப் போராட்டம் நடத்த உள்ளனர்.
இலங்கையில் ஈழத் தமிழர்களை சிங்கள ராணுவம் படுகொலை செய்து வருகிறது. சொந்த நாட்டு மக்கள் 3 இலட்சம் தமிழர்கள் அகதிகளாக காடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஈவு இரக்கமற்ற இராணுவம் காடுகளில் தஞ்சம் புகுந்துள்ள தமிழர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. போரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பலியாகி வருகின்றனர்.
எனவே, சிங்கள இனவெறி அரசின் தமிழர்களுக்கு எதிரான இனவெறிப் படுகொலையைக் கண்டித்தும், இந்திய அரசே இனவெறிப் போரைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், நாளை புதுச்சேரி முழுவதுமுள்ள அனைத்துக் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் கறுப்புப் பேட்ஜ் அணிந்துப் போராட்டம் நடத்துவர்.
மேலும், அடுத்த கட்டப் போராட்டம் குறித்து அனைத்துக் கல்லூரி, பள்ளி மாணவர்கள் கூடி முடிவு செய்வார்கள்.
இத்தகவலை புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்பு தலைவர் சீ.சு.சாமிநாதன் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications