சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் இத்திட்டம் திருவெற்றியூர் வரை நீட்டிக்கப்படும் என தெரிகிறது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை அறிமுகப்படுத்த கடந்த 2006ம் ஆண்டு தமிழக அரசு முடிவு செய்தது. 14 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டம் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக காத்திருந்தது.
இந்நிலையில் நேற்று நடந்த பொருளாதார விவகாரங்கள் தொடர்பான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இத்திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் சென்னையில் 45 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில் இருப்பு பாதைகள் அமைக்கப்பட உள்ளன. 2026ம் ஆண்டில் தினமும் சுமார் 13 லட்சம் பேர் இதை பயன்படுத்துவார்கள் என தெரிகிறது. பயண நேரமும் பாதியாக குறைந்துவிடும்.
சுமார் 24 கி.மீ., நீளம் கொண்ட முதல் பாதை வண்ணாரப்பேட்டையில் இருந்து அண்ணாசாலை வழியாக விமான நிலையம் வரையிலும், 21 கி.மீ., நீளம் கொண்ட இரண்டாவது பாதை சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக பரங்கிமலை வரையிலும் அமைக்கப்படுகிறது.
இத்திட்டத்துக்கு ஆகும் செலவில் 59 சதவீதம் ஜப்பான் அரசுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கடனாக கிடைக்கும். மீதமுள்ள தொகையை மத்திய (20 சதவீதம்) மற்றும் மாநில (21 சதவீதம்)அரசுகள் அளிக்கும். இத்திட்டம் 2014-2015ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்தில் திருவெற்றியூரையும் இணைக்க வேண்டும் என்ற மக்களின் நீண்ட நாள் கோரிக்கையும் பூர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருவெற்றியூரும் இணைக்கப்பட்டால் அதற்கான கூடுதல் தொகையை தமிழக அரசு அளிக்க வேண்டும் என தெரிகிறது.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் திட்டத் தலைவர் கூறுகையில், இத்திட்டத்தில் திருவெற்றியூரையும் இணைப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். இதற்கான வேலைகளில் தற்போது இறங்கியுள்ளோம் என்றார்.
தமிழக அரசின் செய்திகுறிப்பு ஒன்றில், நிலங்களை கைப்பற்றுதல் மற்றும் கூடுதல் செலவு குறித்து ஆராய்ந்து வருகிறோம் என்கிறது.
-
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்












Click it and Unblock the Notifications