ஹைஜாக் நாடகம் - ஒருவர் கைது - 2 பேர் விடுதலை
டெல்லி: கோவாவில் இருந்து டெல்லி சென்று கொண்டிருந்த விமானத்தை 163 பயணிகளுடன் கடத்தப் போவதாக கூறி மிரட்டிய சம்பவத்தில் பிடிக்கப்பட்ட 3 பேரில் இருவரை போலீஸார் விடுவித்தனர். ஒருவர் மட்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
நேற்று கோவாவில் இருந்து இண்டிகோ என்ற நிறுவனத்தின் விமானம் 157 பயணிகள் மற்றும் 6 சிப்பந்திகளுடன் டெல்லிக்கு சென்றது.
விமானம் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூருக்கு மேலே பறந்து கொண்டு இருந்தபோது பயணிகளில் ஒருவர் அத்துமீறி நடந்து கொள்வதாக டெல்லியில் உள்ள விமான போக்குவரத்து கட்டுப்பாடு ஆணையத்துக்கு விமானி தகவல் கொடுத்தார்.
12 ஏ' எண்ணுள்ள சீட்டில் குடிபோதையில் இருந்த பயணி ஒருவர், விமானத்தை கடத்தி தகர்க்கப்போவதாக மிரட்டியுள்ளார். அவருக்கு ஆதரவாக மேலும் 3 பயணிகள் செயல்பட்டதாகவும், பெண் பயணி ஒருவரை அவர்கள் பிடித்து வைத்துக்கொள்ள முயன்றதாகவும் தெரிகிறது.
இதனால் பீதியடைந்த விமானி, கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு புகார் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு, டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் அந்த விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது.
விமான நிலையத்தின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் அது நிறுத்தப்பட்டது. கமாண்டோ வீரர்கள், விமான கடத்தல் தடுப்பு அதிரடிப்படையினர் மற்றும் மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர்கள் விமானத்தை சுற்றி வளைத்தனர். எல்லை பாதுகாப்பு படை விமானங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன.
பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் விமானத்தை கடத்தப்போவதாக மிரட்டியவர்கள் மடக்கிப்பிடிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சிவில் விமான போக்குவரத்து துறை செயலாளர் எம்.மாதவன் நம்பியார் கூறுகையில்,
விமானத்தை கடத்தப்போவதாக மிரட்டியதை தொடர்ந்து டெல்லி விமான நிலையத்தில் அந்த விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டு உடனடி மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது. விமான கடத்தல் தடுப்பு நடவடிக்கை குழு, மத்திய மந்திரிசபை செயலாளர் கே.எம்.சந்திரசேகர் தலைமையில் உடனடியாக கூடி நிலைமை பற்றி ஆலோசனை நடத்தியது.
நிலைமையின் அனைத்து அம்சங்கள் குறித்தும் ஆராய்ந்து, பாதுகாப்புக்கு ஆபத்து இல்லை என்பதை உறுதி செய்தபின் 2 மணி நேரத்துக்குப்பின் பயணிகளை விமானத்தில் இருந்து வெளியே அழைத்துவர முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக மூன்று பேரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் மாதவன் நம்பியார்.
இந்த நிலையில் பிடிக்கப்பட்ட 3 பேரில் சமீர் மற்றும் ஹர்பித் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். ஜிதேந்திரா என்பவர் மட்டும் கைது செய்யப்பட்டு 14 காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், விமானி நிலைமையை சரியாக புரிந்து கொண்டு தக்க நடவடிக்கை எடுத்துள்ளார். பயணிகள் பலரும் அவரை பாராட்டியுள்ளனர் என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications