மகாராஷ்டிராவில் 15 போலீஸ் பலி - மாவோயிஸ்ட் வெறிச்செயல்
மும்பை: மகாராஷ்டிராவில் மார்கேகோவன் என்ற இடத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சப் இன்ஸ்பெக்டர் உள்பட 15 ரோந்து போலீசார் கொல்லப்பட்டனர்.
மகாராஷ்டிராவின் கிழக்குப் பகுதியில் நாக்பூரிலிருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காத்சிரோலி மாவட்டத்தில் மார்கேகோவன் என்ற நகருக்கு அருகே அடர்ந்த காடு ஒன்று உள்ளது. நேற்று அங்கு சில மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் ஏ.கே. 47 உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ரோந்து பிரிவு போலீசார் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு சப் இன்ஸ்பெக்டர் உட்பட 15 போலீசார் மரணமடைந்தனர். இந்த பயங்கரம் சம்பவம் அறிந்த மாவட்ட போலீஸ், குழு ஒன்றை உடனடியாக அனுப்பி வைத்தது. அதற்குள் தாக்குதல் நடத்திய கும்பல் ஓடிவிட்டது.
மரணமடைந்த போலீசாருக்கு மாவட்ட போலீஸ் தலையகத்தில் அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதில் மாநில் குடியுரிமை மற்றும் உணவு அமைச்சர் ரமேஷ் பாங் தெரிவித்துள்ளார். பின்னர் போலீசாரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications