தீக்குளித்த பள்ளப்பட்டி ரவி மரணம்
மதுரை: இலங்கைத் தமிழர்கள் நலனுக்காக தீக்குளித்ததாக கூறப்படும் திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த ரவி சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணமடைந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவர் ஒரு விவசாயி.
2 நாட்களுக்கு முன்பு உடல் முழுவதும் தீயில் கருகிய நிலையில் அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார்.
இலங்கைத் தமிழர்கள் நலனுக்காக அவர் தீக்குளித்ததாக கூறப்பட்டது. ஆனால் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாகவே ரவி தீக்குளித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை ரவியின் மனைவி சித்ராவும், மூத்த மகன் பிரபாகரனும் மறுத்திருந்தனர். நேற்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மதுரைக்கு வந்து ரவியைப் பார்த்து நலம் விசாரித்தார்.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை ரவி உயிரிழந்தார். இதுதொடர்பான வழக்கை அம்மையநாயக்கனூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
ரவி விவகாரம் குறி்த்து திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. பாரி கூறுகையில், வாலிபர் ரவி இலங்கை தமிழருக்காக தீக்குளிக்கவில்லை. 2 வழக்குகளில் ஏற்கனவே சிறைத் தண்டனை பெற்றவர். இன்னும் 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாகவே அவர் தீக்குளித்துள்ளார் என்றார்.
இதற்கிடையே, மாவட்ட ஆட்சித் தலைவர் வாசுகி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், இலங்கை தமிழருக்காக பள்ளப்பட்டி வாலிபர் ரவி தீக்குளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications