சீர்காழ் காங்., பிரமுகர் ரவிச்சந்திரன் உடல் தகனம்
சீர்காழி: ஈழத்தமிழர்களை காப்பாற்ற கோரி தீக்குளித்த சீர்காழி காங்கிரஸ் பிரமுகர் ரவிச்சந்திரனின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது.
சீர்காழியை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் 17வது வார்டு இணை செயலராக இருந்தவர் ரவிச்சந்திரன். கடந்த 6ம் தேதி இலங்கை தமிழர்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டது என கூறி தீக்குளித்தார். மறுநாள் மருத்தவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
அவரது உடலை இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் ஊர்வலமாக அவரது வீட்டுக்கு எடுத்து சென்றனர். நேற்று காலை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவரது வீ்ட்டுக்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் சொன்னார். பின்னர் ரவிசந்திரனின் உடலுக்கு தலைவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், பாமக நிறுவனர் ராமதாஸ், வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், புதிய பார்வை இதழின் ஆசிரியர் நடராஜன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில துணைச் செயலாளர் பழனிசாமி, தமிழர் விடுதலை இயக்கத் தலைவர் சுப இளவரசன், பாஜக நிர்வாகி வைத்திலிங்கம், வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன், வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து இரங்கல் கூட்டம் நடந்தது. அதை தொடர்ந்து ரவிச்சந்திரனின் இறுதி ஊர்வலம் நடைபெற்று, அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications