அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை மாயம்!
வேலூர்: வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை காணாமல் போனது.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூரை சேர்ந்தவர் மும்தாஜ் (43). இவருக்கு கடந்த 5ம் தேதி அவரது வீட்டில் ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து மும்தாஜ் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்ய தனது குழந்தையுடன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு வந்தார்.
அறுவை சிகிச்சைக்கு முன்னதாக சில சோதனைகள் செய்ய வேண்டும் என கூறப்பட்டதையடுத்து மும்தாஜ் தனது குழந்தையை பெண்கள் வார்டில் அருகில் இருந்தவர்களிடம் பார்த்து கொள்ளும்படி சொல்லி விட்டுவிட்டு சென்றார்.
சோதனைகள் முடிந்து மீண்டும் அங்கு வந்த மும்தாஜ் குழந்தை காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்து அழுது புலம்பினார். இது குறித்து மும்தாஜ், காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அடையாளம் தெரியாத ஒரு பெண் மருத்துவமனைக்கு ஆட்டோவில் வந்து மும்தாஜின் குழந்தையை தூக்கிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த மர்மப் பெண்ணை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications