நயாகரா விமான விபத்து-'ஆட்டோ பைலட்' காரணம்?

டேக் ஆப் செய்யும்போதும், தரையிறங்கும்போதும் விமானங்களை விமானிகள் தான் இயக்க வேண்டும். நீண்டதூரம் பயணிக்கும்போது மட்டும் தான் ஆட்டோ பைலட்டை நாடலாம்.
ஆனால், இந்த விமானம் தரையிங்கும்போது ஆட்டோ பைலட்டில் இயங்கியது ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தில் சிக்கிய அந்த காண்டினன்டல் ஏர்லைன்ஸ் (Continental Airlines Flight 3407) விமானம் 60 பயணிகளுடன் நியூஜெர்சி மாகாணத்தின் நெவார்க் நகரிலிருந்து நயாகரா நீர்விழ்ச்சி அருகே உள்ள பஃபலோ விமான நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தது.
விமான நிலையத்தை நெருங்கிய நிலையில் க்ளியரன்ஸ் சென்டர் என்ற புறநகரில் வீடுகளின் மீது விமானம் விழுந்து நொறுங்கியது.
இது குறித்து அமெரிக்க போக்குவரத்து பாதுகாப்புத்துறை நடத்தி வரும் விசாரணையில் இந்த விமானம் தரையிறங்கும்போதே ஆட்டோ பைலட்டால் இயங்கியது தெரியவந்துள்ளதாக விசாரணை அதிகாரியான ஸ்டீவன் சீலேண்டர் கூறியுள்ளார்.
முதலில் இந்த விமானத்தில் பனி படர்ந்ததாகவும், இதனால் அதன் என்ஜின்கள் செயலிழந்ததால் விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால், விமானம் கிளம்பிய 11 நிமிடத்திலேயே ஐஸ்ஸை உருக்கும் சிஸ்டம் தானாகவே செயல்பட ஆரம்பித்துவிட்டதாகவும், விமானம் விபத்துக்குள்ளாகும் வரை இந்த சிஸ்டம் இயங்கியதாகவும் ஸ்டீவன் தெரிவித்துள்ளார்.
தரையிறங்கிக் கொண்டிருந்த இந்த விமானம் 5 விநாடிகளில் 800 அடி அளவுக்கு உயரம் குறைந்ததாகவும் (கிட்டத்தட்ட வானிலிருந்து விழுந்துள்ளது), அதன் பின்னர் வானில் பல முறை டைவ் அடித்து பறந்து கொண்டிருந்த திசைக்கு எதிர் திசையில் தரையில் வந்து விழுந்து சிதறியுள்ளது என்றார்.
விபத்துக்குள்ளான அந்த விமானம் 74 இருக்கைகள் கொண்ட பம்பார்டியர் (Bombardier Dash 8 Q400) ரகத்சைச் சேர்ந்தது.
-
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
அசிங்கப்பட்ட அமெரிக்கா.. 48 மணி நேர போர் நிறுத்தம் கோரிக்கையை நிராகரித்த ஈரான்.. ஹை டென்ஷன் -
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப் -
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
கண்கள் சிவந்த டிரம்ப்.. அமெரிக்க ராணுவ தளபதி அதிரடியாக நீக்கம்! ஈரான் போரில் தடுமாறுவது தான் காரணம்? -
துபாய்க்கு இப்போ தான் உசுரே வந்துருக்கு..ஈரானை முடக்கிய அமெரிக்கா? டிரம்ப் சொன்ன வார்த்தை.. அடுத்து? -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி!












Click it and Unblock the Notifications