ராஜபக்சே அளித்த ஆலோசர் பதவி - நிராகரித்தார் நாராயணமூர்த்தி

இலங்கைத் தலைநகர் கொழும்பில் சில நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியில் நாராயணமூர்த்தி கலந்து கொண்டார். அதிபர் மாளிகையில் நடந்த இந்த நிகழ்ச்சியின்போது இலங்கை அதிபருக்கான தகவல் தொழில்நுட்ப ஆலோசகராக நாராயணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளதாக அதிபர் ராஜபக்சே அறிவித்தார்.
இந்த அறிவிப்பு இந்தியாவில் குறிப்பாக தமிழகத்திலும், உலகத் தமிழர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது.
இலங்கையில் பச்சைப் படுகொலையில் ஈடுபட்டு வரும் ராஜபக்சேவின் ஆலோசகராக நாராயணமூர்த்தி பதவியேற்கக் கூடாது என்று கோரிக்கை எழுந்தது.
குறிப்பாக கர்நாடக வன்னியர் சங்கம் இந்தக் கோரிக்கையை சற்று பலமாக விடுத்தது.
மேலும், பெங்களூரில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொண்ட பிரமாண்ட பேரணியின்போதும், நாராயணமூர்த்தி இந்த கோரிக்கையை ஏற்கக் கூடாது என்று கோரப்பட்டது.
மேலும், சென்னையில் உள்ள இன்போசிஸ் அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தப் போவதாக பல்வேறு தமிழக கட்சிகளும் அறிவிப்பு வெளியிட்டன. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் ஆலோசகர் பதவியை ஏற்கப் போவதில்லை என்று நாராயணமூர்த்தி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனது சொந்தக் காரணங்களுக்காக இப்பதவியை நான் ஏற்க முடியாது. இதை முறைப்படி இலங்கை அரசுக்குத் தெரிவிப்பேன் என்றார்.
உலகெங்கும் உள்ள தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்த முடிவை நாராயணமூர்த்தி எடுத்திருக்கலாம் என்று தெரிகிறது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications