திருப்பூர் மாவட்டம் நாளை உதயம்!
திருப்பூர்: புதிய திருப்பூர் மாவட்டத்தை தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை துவக்கி வைக்கிறார்.
இதற்கான விழா நாளை மாலை 4 மணிக்கு இடுவம்பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது.
கோவை, ஈரோடு மாவட்டங்களில் இருந்து பிரிக்கப்பட்ட சுமார் 4,900 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட பகுதிகள் இந்த திருப்பூர் மாவட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த மாவ்டடத்தின் மக்கள் தொகை 19,17,033 ஆக இருக்கும். இந்த மாவட்டத்தில் திருப்பூர் மாநகராட்சி தவிர, 6 நகராட்சிகள், 17 டவுன் பஞ்சாயத்துகள், 13 பஞ்சாயத்து யூனியன்கள், 273 கிராம பஞ்சாயத்துகள் ஆகிய உள்ளாட்சி அமைப்புகள் இருக்கும்.
தாராபுரம், அவினாசி, பல்லடம், காங்கேயம், உடுமலைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் இந்த மாவட்டத்தின் கீழ் வரும்.
நாளை நடக்கும் இந்த மாவட்ட தொடக்க விழாவிற்கு வருவாய்த்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமை வகிக்கிறார். மத்திய அமைச்சர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், இளங்கோவன், தமிழக அமைச்சர்கள் பொங்கலூர் பழனிசாமி, மு.பெ.சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
விழாவில், தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய திருப்பூர் வரைபடத்தை வெளியிட்டு, மாவட்டத்தை துவக்கி வைக்கிறார்.
புதிய மாவட்ட துவக்க விழாவில், மாநகராட்சி மேயர் செல்வராஜ், எம்.பி.க்கள் சுப்பராயன், பிரபு, கார்வேந்தன், எம். எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, செ.ம.வேலு சாமி, எஸ்.மணி, சண்முகவேலு, பிரபாவதி, பிரேமா, விடியல் எஸ்.சேகர், பொன்னுதுரை உள்ளிட்பட பலர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications