கோடை: மின்வெட்டு வராதாம்-ஆற்காடு சொல்கிறார்
சென்னை: வரும் கோடை காலத்தில் தட்டுப்பாடு இல்லாமல் மின்சாரம் வழங்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் இந்த ஆண்டு கோடை காலத்தில் மின் தட்டுப்பாடு வராது என்றும் சட்டசபையில் இன்று மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.
கேள்வி நேரத்தின்போது அவர் அளித்த பதில்:
தமிழ்நாட்டில் மின் உற்பத்தியை அதிகரிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 2006ம் ஆண்டுக்கு பிறகு திருவள்ளூரில் 1,400 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் நிலையமும், வடசென்னையில் 1,200 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் நிலையமும், மேட்டூரில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிலையமும் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த மின் நிலையங்களில் 2011ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மின் உற்பத்தி தொடங்கிவிடும். இதுதவிர உடன்குடியில் 1,600 மெகாவாட் மின்சாரமும், தூத்துக்குடியில் 1,000 மெகாவாட் மின்சாரமும், ஜெயங்கொண்டத்தில் 1,600 மெகாவாட் மின்சாரமும், செய்யூரில் 400 மெகாவாட் மின்சாரமும் தயாரிக்கும் மின் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இந்தப் பணி கள் 2012ல் முடிவடையும்.
இந்திய வரலாற்றில் முதன் முறையாக தமிழ்நாட்டுக்கு 8 மின் திட்டங்களுக்கு மத்திய அரசு 45,000 கோடிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
வரும் கோடை காலத்தில் தட்டுப்பாடு இல்லாமல் மின்சாரம் வழங்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தற்போது வெளி மாநிலங்களிலிருந்து 1,000 மெகாவாட் மின்சாரம் பெறப்படுகிறது. கோடை காலத்தில் தேவைப்பட்டால் மேலும் 500 மெகாவாட் மின்சாரம் பெறப்படும்.
எனவே இந்த ஆண்டு கோடை காலத்தில் மின் தட்டுப்பாடு வராது.
மின் ஒப்பந்த தொழிலாளர்கள் 21,600 பேரில் 18,000 பேருக்கு பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு அடுத்த ஆண்டு நிரந்தர பணி வழங்கப்படும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications