தீக்குளித்து இறந்த திமுக தொண்டர் குடும்பத்துக்கு ரூ. 1 லட்சம் நிதி
விருதுநகர்: விருதுநகரில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட திமுக தொண்டரின் குடும்பத்திற்கு ரூ. 1லட்சம் நிதியை திமுக அறிவித்து அதை குடும்பத்தினரிடம் வழங்கியது.
சிவகாசி அருகே உள்ள ஆனையூரைச் சேர்ந்தவர் கோகுல்ரத்தினம் (44). தி.மு.க. தொண்டரான இவர் இன்று மதியம் விருதுநகர் ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்தார். கையில் மண்ணெண்ணையை வைத்திருந்தார்.
உள்ளே வந்த அவர் திடீரென உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார். தீப்பற்றிய உடலுடன் தி.மு.க. கொடியை பிடித்தபடி ஓடி வந்தார்.
அப்போது அந்தப் பகுதி வழியாக ரோந்து வந்த போலீஸார் அதிர்ச்சி அடைந்து கோகுல்ரத்தினத்தை காப்பாற்ற முயன்றனர்.
ஆனால் உடல் முழுவதும் கருகிப் போன கோகுல் ரத்தினம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கோகுல் ரத்தினம் கொண்டு வந்த துணிப்பையை மீட்ட போலீஸார் அதில் ரேஷன் கார்டு மற்றும் ஒரு கடிதத்தை மீட்டனர்.
அந்தக் கடிதத்தில், டாக்டர் கலைஞர் நலமுடன் இருக்க வேண்டும். பூரண குணமடைந்து அவர் மீண்டும் பணியை தொடங்க வேண்டும். இலங்கையில் போரை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தது.
இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்து உயிர் நீத்த 9வது தமிழர் கோகுல்ரத்தினம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று விருதுநகருக்கு விரைந்த அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் கோகுலரத்தினம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் திமுக சார்பில் ரூ 1 லட்சத்திற்கான காசோலையை அவரது குடும்பத்தினரிடம் வழங்கினர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications