ஊழிர்களுக்கு 'டாடா' சொல்லத் தயாராகும் டிசிஎஸ்!

இப்போது அவர்களுக்கும் வேறு வழியில்லை. ஆட்கள் குறைப்பு, சம்பளக் குறைப்பு மற்றும் நிறுவனத்தின் மொத்தச் செலவையுமே குறைப்பது என படு மோசமான சூழலுக்குள் செல்வதை இனி தடுக்க முடியாது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது டிசிஎஸ்.
இந்திய ஐடி துறையின் மிகப் பெரிய நிறுவனங்களுள் ஒன்று டிசிஎஸ். சர்வதேச அரங்கில் இந்தியாவின் ஐடி பிரதிநிதியாகத் திகழும் நிறுவனம் இது.
ஆனால் இந்த நிறுவனத்தின் மொத்த வருவாயில் 53 சதவிகிதம் ஊழியர் சம்பளம் மற்றும் இதர செலவினங்களுக்கே போய் விடுகிறதாம்.
சர்வதேசப் பொருளாதாரம் சரிந்து, வேலைக்கான ஆர்டர்களும் நின்று வருவதால் டிசிஎஸ்ஸின் வருவாய் வெகுவாகக் குறைந்து, இப்போது அதிகப்படி உழியர்களே, அந்நிறுவனத்துக்கு சுமையாகத் தெரிகின்றனர்.
இதனால் செலவுக் குறைப்பு நடவடிக்கையில் தீவிரமாக இறங்கிவிட்டது டிசிஎஸ். இது குறித்து அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அலுவலருமான ராமதுரையே அதிகாரப் பூர்வமாக அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது:
"நிலைமை படுமோசமடைந்து வருகிறது. இனி வரும் மாதங்களில் ஊழியர்கள் யாரும் சம்பல உயர்வை எதிர்பார்க்காதீர்கள். கடுமையான ஆட்குறைப்பு நடவடிக்கை மற்றும் ஊதியக் குறைப்புக்குக் கூட வாய்ப்பிருக்கிறது. மீண்டும் ஆரம்பித்த இடத்திலிருந்தே துவங்க வேண்டிய மிக மோசமான நிலையில்தான் நிலாமை உள்ளது.
டிசிஎஸ்ஸில் ஊழியர்களுக்குத் தரப்படும் கூடுதல் ஊக்க சம்பளம் முழுமையாக நிறுத்தப்படும். மேலும் வகிக்கும் பதவிக்கேற்ப வழங்கப்படும் கூடுதல் சம்பளமும் (ஊழியரின் மொத்த சம்பளத்தில் 8 சதவிகிதம்) முழுமையாக நிறுத்தப்படும். எந்தெந்த வழிகளில் முடியுமோ, அந்தந்த வழிகளைப் பிரயோகித்து செலவைக் குறைத்தால்தான் தாக்குப்பிடிக்க முடியும் என்ற நிலையில் இப்போது உள்ளோம்", என்றார்.
மேலும் வேலை நேரத்தையும் இப்போது அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ராமதுரை அறிவித்துள்ளார். அதன்படி இனி வாரம் 40 மணி நேரம் என்றிருந்த வேலை நேரம் இப்போது 45 மணி நேரங்களாக மாற்றியமைக்கப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
டாடா குழுமத்தில் வெடித்த பிரச்சனை.. சந்திரசேகரனுக்கு வேட்டு வைக்கும் நோயல் டாடா! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications