திமுக வக்கீல்களுக்கு கருணாநிதி புது உத்தரவு
சென்னை: உச்சநீதிமன்றத்தில் வெளியாகும் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு மீண்டும் பணிக்குத் திரும்பலாம் என்று திமுக வக்கீல்களுக்கு முதல்வர் கருணாநிதி அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தி.மு.க. சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கை:
முதல்-அமைச்சர் கருணாநிதி மருத்துவமனையில் இருந்து என்னிடம் தொடர்பு கொண்டு கீழ்கண்ட அறிவுரை வழங்கியுள்ளார்.
மார்ச் 2-ந்தேதி (திங்கட்கிழமை) வழக்கறிஞர்கள் நீதிமன்றம் செல்லவேண்டும் என்று ஏற்கனவே தி.மு.க. வழக்கறிஞர்கள் அணியின் சார்பில் விடப்பட்ட அழைப்பினை, உச்ச நீதிமன்றத்தில் சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் தொடர்ந்த வழக்கு வருகிற 3-ந் தேதி அன்று விசாரணைக்கு வருவதால் அதன்பின் வழக்கறிஞர்கள் நீதி மன்ற நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.
எனவே வழக்கறிஞர்களிடையே சுமூக நிலை ஏற்பட உதவிடும் வகையில் வழக்கறிஞர்கள் திங்கட்கிழமை நீதிமன்றம் செல்வதை தவிர்த்து உச்ச நீதிமன்ற முடிவுக்கு ஏற்ப வழக்கறிஞர்கள் நீதி மன்றம் செல்லலாம் என்று தி.மு.க. வழக்கறிஞர்கள் அணி சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பால் கனகராஜ் சமீபத்தில் திமுகவிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவி்த்தார் என்பது நினைவிருக்கலாம்.
-
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
“மின்வாரிய பதவி உயர்வு விவகாரத்தில் பொய்.. தவெக அரசின் பித்தலாட்டம்”.. பாய்ந்து வந்த திமுக! -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்?












Click it and Unblock the Notifications