வக்கீல்களை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க முயன்ற முன்னாள் போலீஸார்
நெல்லை: நெல்லையில் வக்கீல்கள் உண்ணாவிரதத்தின் போது காவல்துறையினரின் குடும்பத்தினரையும் பெண்களையும் அவமதிக்கும் விதமாக பேசியதை கண்டித்து, முன்னாள் போலீசார் குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருக்க முயன்றனர். அதற்கு போலீஸ் அனுமதி மறுத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லையில் இன்று போலீசாருக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்க போவதாக சாந்திநகர் காவலர் குடியிருப்போர் நலசங்கம் சார்பில் அதன் செயலாளர் நாராயணசாமி என்பவர் அறிவித்திருந்தார்.
இதற்கு அந்த பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற காவலர்கள் மற்றும் பெண்கள் ஆதரவு தெரிவித்தனர். இதை தொடர்ந்து சாந்தி நகர் காவலர் குடியிருப்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்யப்பட்டது.
தகவல் அறிந்ததும் போலீசார் சென்று அவர்கள் உண்ணாவிரதம் இருப்பதற்கு அனுமதியளிக்க மறுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து சாந்திநகர் காவலர் குடியிருப்போர் நலசங்க செயலாளர் நாராயணசாமி கூறுகையில்,
நான் காவல் துறையில் 38 ஆண்டுகள் பணியாற்றி உள்ளேன். நெல்லையி்ல் நேற்று உண்ணாவிரதம் இருந்த வக்கீல்கள் காவலர்களையும், அவர்களின் குடும்பத்தில் உள்ள பெண்களையும் இழிவாக பேசியுள்ளனர்.
இது எங்களை கொதிப்படைய செய்தது. இதை தட்டி கேட்பதற்கு யாரும் முன்வரவில்லை. எனவே நான் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவு செய்தேன். இருப்பினும் ஜனாநாயாக முறையில் போராட முடிவு செய்தோம்.
மாநில அளவில் ஓய்வு பெற்ற காவலர் நலசங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்த உள்ளேன். நான் வக்கீல்களுக்கு எதிரி அல்ல. அவர்கள் பேசியதை நான் எதிர்க்கிறேன் என்றார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications