கடற்புலிகளின் தாக்குதல் முறியடிப்பு- ராணுவம்
கொழும்பு: விடுதலைப் புலிகளின் கடற் பிரிவான கடற்புலிகளின் தாக்குதலை முறியடித்து விட்டதாகவும், அவர்களின் 3 படகுகள் மூழ்கடிக்கப்பட்டதாகவும், 20 புலிகள் கொல்லப்பட்டதாகவும் ராணுவம் கூறியுள்ளது.
விடுதலைப் புலிகள் வசம் உள்ள கடைசி நகரான புதுக்குடியிருப்பை மீடக ராணுவம் முயன்று வருகிறது. ஆனால் விடுதலைப் புலிகள் கடும் எதிர் தாக்குதலை மேற்கொண்டு வருவதால் திணறி வருகிறது.
இந்த நிலையில், முல்லைத்தீவு பகுதியில் கடற்புலிகளின் தாக்குதலை முறியடித்துள்ளதாக ராணுவம் கூறியுள்ளது.
இதுகுறித்து இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், வடக்கு புது மத்தாளன் பகுதியில், நான்கு தற்கொலைப் படகுகள் உள்பட 15 படகுகள் மூலம் கடற்படையினர் மீது தாக்குதல் நடத்த விடுதலைப் புலிகள் வந்தனர்.
இதையடுத்து அவர்களுடன் ராணுவம் கடுமையாக மோதியது. ராணுவத்தின் 55வது பிரிவு வீரர்கள் விடுதலைப் புலிகளின் தாக்குதல் முயற்சிய தடுத்து நிறுத்தினர். இதில் 2 படகுகள் மூழ்கடிக்கப்பட்ன. இன்னொரு படகு சேதமடைந்தது.
அப்பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையே நேற்று மாலை முதல் இன்று காலை வரை சண்டை நீடித்தது.
இந்த மோதலில் 20 விடுதலைப் புலிகள் உயிரிழந்துள்ளனர். புலிகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டிருப்பது அவர்களது தகவல் தொடர்பு செய்திகள் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்தத் தாக்குதலை கடற்புலிகளின் தலைவர் சூசை மற்றும் லாரன்ஸ் ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தியதாக தெரிய வந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications