'சரண்டரான' 12 பஞ்சாயத்து தலைவர்களின் கார்கள்
தூத்துக்குடி: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி மேயர் மற்றும் 12 பஞ்சாயத்து தலைவர்களிடம் இருந்து கார் சாவிகள் பெறப்பட்டு கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டது. அமைச்சர் காரில் இருந்து தேசிய கொடியும் அகற்றப்பட்டது.
தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானவுடன் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமுலுக்கு வந்துள்ளன. இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தி்ல் அரசு கார்களை பயன்படுத்தும் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் அதனை ஒப்படைக்குமாறு, மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான பிரகாஷ் உத்தரவிட்டார்.
இதையடுத்து நேற்று தூத்துக்குடி மாநகராட்சி மேயர் கஸ்தூரி தங்கம் கமிஷனர் லட்சுமியிடம் கார் சாவியை ஒப்படைத்தார். தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சின்னத்துரை, மாவட்ட பஞ்சாயத்து செயலாளரிடம் சாவியை ஒப்படைத்தார்.
இது தவிர 12 பஞ்சாயத்து யூனியன் தலைவர்களும் அந்தந்த யூனியன் பிடிஓக்களிடமும், கோவில்பட்டி பஞ்சாயத் தலைவர் கோவில்பட்டி நகராட்சி கமிஷனரிடமும் கார் சாவியை ஓப்படைத்தனர். இந்த சாவிகள் அனைத்தும் கலெக்டரின் நேரடி பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் நன்னடத்தை விதிகளை தொடர்ந்து அமைச்சர்களின் கார்களில் தேசிய கொடி அகற்றப்பட்டது. தூத்துக்குடிக்கு நேற்று முன்தினம் விமானம் மூலம் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் வந்தார். வரும்போது அவர் காரில் தேசிய கொடி பறந்தது.
சென்னையில் நடக்கும் சமூக நலத்துறை ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்ள நேற்று மதியம் தூத்துக்குடியில் இருந்து விமானம் முலம் சென்னை சென்றார். அப்போது அவரது காரில் தேசிய கொடி அகற்றப்பட்டு, திமுக கட்சி கொடி பறந்தது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications