இலங்கை அணி மீதான தாக்குதல்-இந்தியாவுக்கு தொடர்பாம்: சொல்கிறது பாக்
லாகூர்: லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி மீது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் இந்தியாவுக்குத் தொடர்பு இருக்கலாம் என பாகிஸ்தான் கூறியுள்ளது.
இதுகுறித்து லாகூர் காவல்துறை ஆணையர் குஷ்ரூ பெர்வைஸ் கூறுகையில், இலங்கை அணியினரை பத்திரமாக பாதுகாப்புப் படையினர் காப்பாற்றி விட்டனர் என்றார்.
முன்னாள் ஐஎஸ்ஐ தலைவர் ஹமீத் குல் கூறுகையில், பாகிஸ்தானைப் பலவீனப்படுத்த இந்தியா தொடர்ந்து முயன்று வருகிறது. பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க இந்தியா முயன்று வருகிறது. எனவே இலங்கை அணியினர் மீதான தாக்குதலில் இந்தியாவுக்கும் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது.
இந்தியாவின் சதித் திட்டமும் இதில் அடங்கியிருக்கலாம் என்றார்.
இதற்கிடையே, லாகூர் தாக்குதல் குறித்து மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத கட்டமைப்புகள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்.
இந்த கொடும் குற்றத்தை இழைத்தவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் இதுபோன்ற தீவிரவாத செயல்கள் தொடரத்தான் செய்யும்.
இந்த நேரத்தில் சர்வதேச சமுதாயத்தை குழப்பும், திசை திருப்பும் வேலைகளில் பாகிஸ்தான் ஈடுபடக் கூடாது. மாறாக, இந்தியாவுடன் இணைந்து தீவிரவாத கட்டமைப்புகளை தூள் தூளாக்க முன்வர வேண்டும். சதிகார்ரகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications