இலங்கைத் தமிழர்களுக்காக ஜெ. நாளை உண்ணாவிரதம்

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று கோரி அதிமுக பொதுச் செயலாளர் நாளை சென்னையில் உண்ணாவிரதத்தில் ஈடுபடுகிறார். இதையடுத்து பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளை காலை 9 மணிக்கு சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை முன்பு தனது உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்கிறார் ஜெயலலிதா. மாலை 5 மணிக்கு உண்ணாவிரதம் முடிவடைகிறது.

இதற்கான மேடை அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. ஜெயலலிதா ஒரு மேடையிலும், மற்ற நிர்வாகிகள் தனியாக ஒரு இடத்திலும் அமர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஜெயலலிதா அறிவித்துள்ளது படி, மேடையின் ஒரு ஓரத்தில் பெரிய உண்டியலும் வைக்கப்படுகிறது. இதில் முதலில் பணத்தைப் போட்டு வசூலைத் தொடங்கி வைக்கிறார் ஜெயலலிதா.

மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் அதிமுக பிரமுகர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அங்கும் உண்டியல் வைத்து வசூல் செய்யப்படவுள்ளது.

பலத்த பாதுகாப்பு

ஜெயலலிதாவின் உண்ணாவிரதப் போராட்டத்தையடுத்து அங்கு பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நூற்றுக்கணக்கான போலீசார் உண்ணாவிரதம் நடைபெறும் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர். அப்பகுதியில் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்படவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+