தமிழ் மாநில சிவசேனா 9 தொகுதிகளில் போட்டி
மதுரை: வரும் மக்களவைத் தேர்தலில் மதுரை உள்பட 9 தொகுதிகளில் தமிழ் மாநில சிவசேனா கட்சி தனித்து போட்டியிடும் என்று அக் கட்சியின் மாநிலச் செயல் தலைவர் செல்வம் கூறினார்.
இக் கட்சியின் உயர்மட்ட அரசியல் நிர்ணய ஆலோசனை கூட்டம் மதுரையில் நடந்தது. செல்வம் தலைமையில் நடந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
-இலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு உடனே தலையிட்டு போர் நிறுத்தம் செய்ய முன்வர வேண்டும்.
-மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்துக்கு இந்து அமைப்புகளை முறைப்படி அழைக்க வேண்டும்.
-நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை, திருப்பூர், வேலூர், தென் சென்னை, நெல்லை, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், தேனி ஆகிய 9 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவோம். மற்ற தொகுதிகளில் யாருக்கு வாக்களிப்பது என தேர்தல் நடைபெறும்போது முடிவு செய்யப்படும்.
இக் கூட்டதில் மாநில பொதுச் செயலாளர் குபேந்திரன், இளைஞரணி பொதுச் செயலாளர் நரசிங்கம், மாநிலச் செயலாளர் செந்தில்குமார், மாவட்ட தலைவர்கள் பரமசிவம் ராஜா (மதுரை), சாந்தி (விருதுநகர்), நரசிம்மன் (சிவகங்கை) உள்பட பலர் பங்கேற்றனர்.
திருவள்ளூரில் இந்து முன்னணி போட்டி:
இதற்கிடையே நாடாளுமன்ற தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் பாஜக போட்டியிடாவிட்டால் நாங்கள் போட்டியிடுவோம் என இந்து முன்னணி அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக 14 தொகுதிகளில் போட்டியிடும் என அறிவித்துள்ளது.
இந்நிலையில் இந்து முன்னணி சார்பில் ஒன்றிய ஆலோசனை கூட்டம் மீஞ்சூரில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சோமு ராஜசேகர் தலைமை தாங்கினார். குணபூசனம், இருசப்பன், செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதில், திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளரை நிறுத்தவில்லை என்றால் இந்துக்களின் ஓட்டு மற்ற கட்சியினருக்கு செல்வதை தடுக்கும் விதமாக இந்து முன்னணி சார்பில் வேட்பாளரை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
பயங்கரவாதம், தீவிரவாதத்தை முறியடிப்பது, மதமாற்றத்தை முழுமையாக தடுப்பது, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்துவது, கோவில் சொத்துக்களை மீட்டு ஏழைகளுக்கு வழங்குவது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications