தேசியவாத காங். தலைமையிலான மேகாலயா அரசு பெரும்பான்மை இழந்தது
ஷில்லாங்: தேசியவாத காங்கிரஸ் தலைமையிலான மேகாலயா அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து விட்டது.
மேகலாயாவில் தேசியவாத காங்கிரஸ் தலைமையில் மேகாலயா முற்போக்குக் கூட்டணி அரசு பதவியில் உள்ளது.
இந்த நிலையில், தேசிய விழிப்புணர்வு இயக்கக் கட்சியின் தலைவரும், இக்கட்சியின் ஒரே எம்.எல்.ஏவும், அமைச்சருமான பால் லிங்டோ திடீரென தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டார்.
சமீபத்தில்தான் இரு சுயேச்சைகள் ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றனர். இதனால் மேகாலயா அரசு சிக்கலில் ஆழ்ந்தது. இந்த நிலையில் பால் விலகிக் கொண்டதால் அந்த அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து விட்டது.
காங்கிரஸுடன் கூட்டணி வைக்க பி.ஏ.சங்மா உள்ளிட்ட சில தலைவர்கள் முயற்சிப்பதால் தான் விலகி விட்டதாக பால் லிங்டோ கூறியுள்ளார்.
மேகாலயாவில் மொத்தம் 60 எம்.எல்.ஏக்கள். தற்போது ஆளுங்கூட்டணியில் 30 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். மேலும் சிலரும் விலகக் கூடும் எனத் தெரிகிறது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications