வன்னியில் நேற்று நடந்த தாக்குதலில் 124 தமிழர்கள் பலி
வன்னி: இலங்கையின் வன்னியல் நேற்று படைகள் நடத்திய வெறித் தாக்குதலில் 124 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன் மற்றும் பொக்கணை பகுதிகளை நோக்கி செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் பிற்பகல் வரை சிறிலங்கா படையினர் அகோர ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோர்ட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தினர்.
இதில் 124-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 254 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த நிலையில் கொண்டு வரப்பட்ட 254 பேரில் 45 பேர் மாத்தளன் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 15 பேர் சிறுவர்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மழையிலும் தொடரும் வெறித் தாக்குல் ..
கடுமையான மழை பெய்து வருவதால் எறிகணைத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் உடலங்களை அப்புறப்படுத்த முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளதாகவும் காயப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுவர முடியாத நிலையும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மார்ச் முதல் நாளிலிருந்து 7ம் தேதி வரை வரை காயமடைந்த நிலையில் 700 பேர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். இவர்களில் 137 பேர் சிறுவர்கள். இவர்களில் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் கடந்த 10 நாட்களில் நடைபெற்ற எறிகணைத் தாக்குதல்களில் 50-க்கும் அதிகமான சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 200-க்கும் அதிகமான சிறுவர்கள் காயமடைந்துள்ளனர் என புதுமாத்தளன் மருத்துவமனை உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications