பங்குகளை விற்ற சேர்மன்-ஏர்டெல் பங்குகள் விலை கிடுகிடு சரிவு!
டெல்லி: தனது பங்குகள் முழுவதையும் பார்தி சேர்மன் இன்று விற்பனை செய்துவிட்டதால், இன்று பார்தி நிறுவனப் பங்குகள் சந்தையில் பெரும் சரிவுக்குள்ளாயின. கிட்டத்தட்ட 5 சதவிகிதம் விலை வீழ்ச்சி கண்டது இந்த நிறுவனப் பங்குகள்.
இப்போதெல்லாம் ஒரு நிறுவனத்தின் சேர்மன் அல்லது முக்கியப் பொறுப்பிலிருப்பவர்கள் அந்த நிறுவனத்தில் தங்களுக்குச் சொந்தமான பங்குகளை விற்கிறார்கள் என்றால் என்னமோ நடக்கப் போகிறது என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள் இதர முதலீட்டாளர்களும். குறிப்பாக சத்யம் நிறுவனம் ஆட்டம் கண்டதன் பின்னணியில் இம்மாதிரி உள்ளடி வேலைகளே அதிகம் இருந்ததால் இப்போது முதலீட்டளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து கொண்டார்கள்.
பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சேர்மன் மனோஜ் கொஹ்லி. இவருக்கு 123,000 பங்குகள் இருந்தன அந்த நிறுவனத்தில். இவற்றை மார்ச் 6 மற்றும் 9-ம் தேதி இரு கட்டங்களாக விற்றுவிட்டார் மனோஜ். தனிப்பட்ட காரணங்களுக்காக இவற்றை விற்றுவிட்டதாக செபிக்கு தெரிவித்துள்ளார் மனோஜ்.
இந்த தகவல் இன்று வெளியாகிவிட, பார்தி நிறுவனப் பங்குகள் கணிசமாகக் குறையத் தொடங்கிவிட்டன. சுமார் 5சதவிகிதத்துக்கும் அதிகமாக விலை குறைந்து 559.9 ரூபாய்க்கு கைமாறின. இதனால் முதலீட்டாளர்கள் பெருத்த நஷ்டத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
அடுத்து எந்த வடிவில் சோதனை வருமோ என்ற அச்சத்திலேயே இந்த நிறுவனப் பங்குகளை வந்த விலைக்குத் தள்ளி விடுகிறார்கள் வாடிக்கையாளர்கள் என்கிறார் டாரஸ் அஸெட் நிறுவன நிர்வாக இயக்குநர் ஆர்கே குப்தா.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications