'ஆற்காடு'.. அன்பழகன், கனிமொழி புகழாரம்
சென்னை: முதல்வர் கருணாநிதிக்கும் தொண்டர்களுக்கும் இடையே ஒரு உறவுப்பாலமாக இருந்து வருபவர் ஆற்காடு வீராசாமி என்று புகழ்ந்தார் திமுக எம்பி கனிமொழி.
அமைச்சர் ஆற்காடு வீராசாமி தம்பி தேவராஜன் மகள் திருமணத்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடத்தி வைத்த திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் கூறியதாவது:
1962ம் ஆண்டில் ஆற்காடு வீராசாமியின் திருமணத்தை நான் நடத்தி வைத்தேன். பெரியார் மீது மதிப்பும், அண்ணா மீது அன்பும், கலைஞர் மீது பிடிப்பும் கொண்டவர் ஆற்காடு.
1957ம் ஆண்டு தேர்தல் நேரத்தில் ஆற்காடு வீராசாமி எனக்கு அறிமுகம் ஆனார். கடந்த 52 ஆண்டுகளாக நான் அவரிடம் பழகி இருக்கிறேன். அவர் என்னிடம் சகோதராய் பழகுவார்.
பக்குவமான அணுகுமுறையும், கொள்கை உறுதியும் கொண்டவர். இவருடைய நட்பு, பண்பால் இந்த இயக்கம் கட்டிக்காக்கப்படுகிறது. மற்றவர்களை முன்னிலைப்படுத்தி நம்மைப் பின்னிலைப்படுத்தும் போது நம்முடைய வாழ்க்கை சிறந்ததாக இருக்கும்.
மணமக்கள் அதை பின்பற்றி சிறப்பான முறையில் இல்லற வாழ்க்கை நடத்தினால் மகிழ்ச்சி அடையலாம். ஆண்- பெண் உறவு மட்டும் இன்பமல்ல. அது ஒரு அடையாளம் தான். மன பக்குவம் மூலம் பெறுகின்ற இன்பமே பேரின்பம் என்றார்.
திமுக எம்பியான கனிமொழி பேசுகையில்,
கட்சி நிர்வாகிகள் யாராவது தவறு செய்தால் முதல்வர் அழைத்துத் திட்டுவார். அப்போது கலைஞரை பார்க்க அவரது அறைக்கு செல்லும் போது அமைச்சர் ஆற்காடு வீராசாமி அருகில் இருக்கிறாரா என்று பார்த்து விட்டு தான் செல்வார்கள்.
அவர் அருகில் இருந்தால் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள். தலைவர் திட்ட ஆரம்பித்தவுடன் என்ன விஷயமாக இருந்தாலும் தப்பு செய்தவர்களை காப்பாற்றுவதற்கு நல்ல வார்த்தைகளை தலைவரிடம் ஆற்காடு வீராசாமி எடுத்து கூறுவார்.
அந்த உயர்ந்த பண்பு அவரிடம் இருப்பதால் கட்சியில் எல்லோருக்கும் அவரை பிடிக்கும். தலைவருக்கும், தொண்டர்களுக்கும் இடையே அவர் ஒரு உறவுப்பாலமாக இருந்து வருபவர் அவர்.
தலைவர் இடும் கட்டளைகளை அருகில் இருந்து செய்யக்கூடியவர். நாங்கள் அருகில் இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை. ஆற்காடு வீராசாமி அருகில் இருப்பதை கலைஞர் மகிழ்ச்சியாக கருதுவார் என்றார்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications